மோர்னே ரோகு 1902

மே 8, 1902 இல் பெலி மலையில் உள்ள லா மொன்டாக்னே என்ற எரிமலை வெடித்து எரிமலைக் குழம்பு செய்ன்ட் பியர் தெலா மார்டினிக் என்ற ஊரை முழுவதும் அழித்து விட்டது (Caribbean island of Martinique). 

அன்று தெய்வச் செயலாக, செய்ன்பியர், மொளண்ட் பீலேக்கு இடையில் உள்ள மோர்னே ரோகு என்ற கிராமம் மட்டும் தப்பித்துக் கொண்டது. 

மே 8, 1902 விண்ணேற்புத் திருநாள் அன்று மௌன்ட் பீலீ எரிமலை, எரிமலைக் குழம்பை வெளியில் கக்கியது. 

மோர்னே ரோகு மக்கள் திருஇருதய பக்தியுள்ளவர்கள். 

உடனே மக்கள் ஒன்று சேர்ந்து, கோயிலுக்குச் சென்று பாவசங்கீர்த்தனம் செய்து, நற்கருணை உட்கொண்டனர். 

பங்குத் தந்தை அருட்திரு மேரி நற்கருணையைப் பீடத்தில் வைத்து ஆராதனை செய்ய ஆரம்பித்தார். 

ஒரு பெண், "அதோ நற்கருணையில் இயேசுவின் திருஇருதயம்" என்று கத்தினாள். 

எல்லோரும் இயேசுவின் திருஇதயத்தையும், அதிலிருந்து இரத்தம் சொட்டுவதையும் கண்டனர். 

இந்தக் காட்சி பலமணி நேரம் நீடித்தது. 

அன்றே மோர்னே ரோகு என்ற கிராமம் எரிமலையின் ஆபத்திலிருந்து அதிசயமாய் காப்பாற்றப்பட்டது.