அருளாளர் பிரான்சிஸ்கோ, ஜெசிந்தா மார்டோ

அருளாளர் பிரான்சிஸ்கோ, ஜெசிந்தா மார்டோ 1910-1920

எட்டு வயதுடைய பிரான்சிஸ்கோவும், ஆறு வயதுடைய ஜெசிந்தாவும்; லூசியாவுடன் சேர்ந்து ஆடுகளை மேய்த்து வந்தனர். ஒருநாள் 1916 ஆம் ஆண்டு ஒரு வானதூதர் அவர்களுக்குத் தோன்றினார், அவர் இடது கையில் ஒரு பூசை பாத்திரத்தையும், வலது கையில் நற்கருணையையும், அதிலிருந்து இரத்தம் சொட்டுவதையும் கண்டனர். வானதூதர் அவர்களோடு சேர்ந்து கொண்டு முழங்கால் படியிட்டு இந்த ஜெபத்தை சொல்லச் சொன்னார். "பிதா சுதன் பரிசுத்த ஆவியாகிய மிக பரிசுத்த தமத்திருத்துவமே உம்மை நாங்கள் ஆராதிக்கிறோம். உலகின் பாவங்களுக்காகவும், நிந்தை அவமானங்களுக்காகவும் பரிகாரமாக மிகப் பரிசுத்த இயேசுவின் திருவுடல், திருஇரத்தம். அவர் ஆன்மா அவர் தெய்வீகத்தையும் உலகில் உள்ள நற்கருணை பேழையில் இருக்கும் பாடுகளையும், மரியாவின் மாசற்ற திருஇதயத்தின் வழியாக பாவிகள் மனம் திரும்ப வேண்டுமென்று ஒப்புக் கொடுக்கிறோம்" பிறகு வானதூதர் பூசை பாத்திரத்தையும், நற்கருணையையும் உயர்த்திப் பிடித்து லூசியாவுக்கு நற்கருணையையும் பிரான்சிஸ்க்கோ ஜெசிந்தாவுக்கு கிண்ணத்தில் பருகும்படியும் கொடுத்தார். "உலகில் நன்றி கெட்ட மனிதர் செய்யும் அக்கிரமங்களுக்குப் பரிகாரம் செய்து கடவுளுக்கு ஆறுதல் கொடுங்கள்" என்று கூறிவிட்டு மீண்டும் தரையில் விழுந்து ஆராதனை செய்து மும்முறை அதே மன்றாட்டைச் சொன்ன பிறகு மறைந்து போனார். அன்று முதல் பிரான்சிஸ்க்கோ வும், ஜெசிந்தாவும் நற்கருணையில் இருக்கும் இயேசுவை வாங்கவும், நற்கருணைப் போழையில் மறைந்துள்ள இயேசுவின் பிரசன்னத்தில் நீண்ட நேரம் ஜெபிக்கவும் தணியாதத் தாகம் கொண்டனர்.

மே 13, 1917 ஆம் ஆண்டில் இந்த மூன்று சிறுவர்களுக்கும் பாத்திமாவில் உள்ள கோவா டெ ஈரே என்ற இடத்தில் தேவ அன்னை காட்சி அளித்து, ஒவ்வொரு மாதமும் 13 ஆம் தேதி அக்டோபர் மாதம் வரை அங்கு வரும்படி கேட்டுக் கொண்டார்கள். தான் பரலோகத்தில் இருந்து வந்ததாகவும். உலக சமாதானத்திற்காகவும் பாவிகம் மனம் திருப்பவும் அடிக்கடி ஜெபமாலை சொல்லும்படி கேட்டுக் கொண்டார்கள்.

ஆறு வயதுடைய ஜெசிந்தா அடிக்கடி நற்கருணை நாதரைச் சந்தித்துப் பல தப முயற்சிகளையும், பல ஜெபமாலையும் செய்து பாவிகள் மனம் திரும்பும்படி ஒப்புக் கொடுப்பாள். அவள் பல முறை ரொட்டியும் தண்ணீரும் குடிக்காமல் தபம் செய்வாள். துன்பங்களையும் வேதனைகளையும் முணுமுணுக்காமல் பொறுமையாகச் சகித்துக் கொள்வாள்.

பிரான்சிஸ்கோ இறந்த பிறகு ஜெசிந்தா மிகவும் நோயுற்றாள். அவளுக்குப் புதுநன்மை கொடுக்கப்போவதை அறிந்து "என் அன்பர் இயேசு வந்துவிட்டால் எனக்கு வேறு எதுவும் வேண்டாம்" என்றாள் நோய் முற்றிப்போனதால் ஜெசிந்தாவை மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு நற்கருணை நாதரைத் தினமும் வாங்கவும். வெகுநேரம் அவரை ஆராதிக்கவும் முடிந்தால் அவளுக்கு இருந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒரு நாள் பாத்திமா அன்னை அவளுக்குத் தோன்றி ஜெசிந்தாவை சீக்கிரம் மோட்சத்துக்கு அழைத்து செல்வதாக அறிவித்தாள். அன்று முதல் அவள் தினமும் நற்கருணை வாங்கவும், ஜெபமாலை சொல்லவும், நற்கருணை ஆராதனை செய்யவும் ஓயவில்லை. அவள் பரலோகம் செல்லும் முன் சொன்ன இறுதி வார்த்தைகள், "குருக்களுக்காக ஜெபியுங்கள்", போர்த்துக்கல் நாட்டிலுள்ள பாத்திமாவுக்குத் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் சென்ற போது மே 13 ஆம் நாள் பிரான்சிஸ்க்கோவுக்கும், ஜெசிந்தாவுக்கு அருளாளர் பட்டம் வழங்கி மகிமைப்படுத்தினார்.