புனித ஜான் போஸ்கோ

புனித ஜான் போஸ்கோ 1815-1888 (திருநாள் ஜனவரி 31)

புனித ஜான் போஸ்கோ தான் ஆண்களுக்கு சலேசிய துறவற சபையையும், பெண்களுக்கு கிறிஸ்தவர்களின் சகாய மாதா சபையையும் நிறுவினார். இளையோருக்குக் கல்வி புகட்டுவதிலும், பள்ளிக் கூடங்களையும், ஜெபக்கூடங்களையும் மறைபரப்புப் பணிகளை செய்வதிலும் அயராது உழைத்தார்.

புனிதர் திருப்பலி மீதும், நற்கருணை மீதும் மிகுந்த பக்தி பற்றுதல் கொண்டிருந்தார். அவர் சபையில் உள்ள எல்லா துறவிகளும் தினசரி திருப்பலியில் பங்கெடுக்க வேண்டும் என்ற ஒழுங்கைக் கொண்டு வந்தார். அவர் புனித அகுஸ்தினார் கூறிய பொன் மொழிகளை அடிக்கடி நினைவூட்டுவார். அதாவது, ஒருவர் பக்தியோடு தவறாமல் தினசரி பங்கெடுத்தால் பாவத்தோடு ஒருக்காலும் மரிக்கமாட்டார் என்பதே திருப்பலியில் எழுந்தேற்றத்தின் போது நாம் எதைக் கேட்டாலும் நம் ஆண்டவர் தவறாமல் அதைத் தருவார் என்று கூறிவந்தார். "கடவுள் உங்களுக்கு அநேக வரங்களை கொடுக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களா? அப்படியானால் அவரை அடிக்கடி சந்தியுங்கள். என் அன்பார்ந்த பிள்ளைகளே! சாத்தானை வெல்ல மிகச் சிறந்த வழி திவ்யநற்கருணை சந்திப்பு. இயேசுவிடம் அடிக்கடிச் சொல்லுங்கள் சாத்தான் ஒடி விடுவான். இந்த நற்கருணை ஒர் ஒப்பற்ற திருஇரத்தத்தையும் நமக்குத் தருகிறது" என்று புனிதர் கூறி வந்தார்.

மரியன்னையின் பிறந்த நாள் செப் 8 ஆம் தேதி கொண்டாட 600 மாணவர்கள் கோயிலில் கூடினர். புனித ஜான் போஸ்கோ திருப்பலி நிறைவேற்றினார். நற்கருணை பேழையில் 20 நற்கருணை மட்டுமே மட்டுமே இருந்தன. சக்ரீஸ்டன் 600 மாணவர்களுக்குத் தேவையான ஓஸ்தியை பூசைக்கு முன்பு பலி பீடத்தில் வைக்க மறந்து விட்டான். புனிதர் நற்கருணை வழங்க நற்கருணைப் பேழையை திறந்து நற்கருணைப் பாத்திரத்தை திறந்த போது அதில் மிகவும் குறைவான நற்கருணை இருப்பதை கண்டு அதிர்சியுற்றார். சக்ரீஸ்டனுக்கு சொல்ல முடியாத பயமும், துக்கமும் ஏற்பட்டுவிட்டது, புனிதர் நற்கருணை பாத்திரத்தில் உள்ள நற்கருணையை மாணவர்களுக்கு கொடுக்கலானார். வரிசை வரிசையாக மாணவர்கள் வந்து நற்கருணையை வாங்கிச் சென்றனர். எல்லா மாணவர்களும் (600 பேரும்) நற்கருணை வாங்கிச் சென்றனர். நற்கருணைப் பாத்திரத்தில் இன்னும் மீதி இருந்தது. 5 அப்பத்தை 5000 பேருக்கு பங்கிட்டுக் கொடுத்த இயேசு, 20 நற்கருணையை 600 பேருக்குக் கொடுத்தது ஒன்றும் காரியமல்ல!