போக்ஸ்டெல் 1380

1380 இல் அருட்தந்தை எளிஜியுஸ் வான்டெர் அக்கர் புனித பேதுரு ஆலயத்தில் (ஹாலந்து) திருப்பலி நிறைவேற்றிய போது, வசீகர வார்த்தையைச் சொன்ன பிறகு தவறுதலாக பாத்திரத்தைத் தட்டிவிட்டார் (Boxtel, Netherland). 

ஆனால், அவர் வசீகரம் செய்ததோ வெண்ணிற இரசம், பலிபீடத்துணியில் சிந்தியதோ, சிவப்பு நிற இரத்தம். 

பூசை முடிந்ததும், இரத்தக்கறை படிந்த துணியை சக்ரீஸ்தில் கொண்டு போய், தண்ணீர் ஊற்றி கழுவினார். 

இரத்தக்கறை போகவில்லை!

எனவே அருட்தந்தை எளிஜியுஸ் அதை ஒரு பெட்டியில் வைத்துப் பத்திரப்படுத்தியிருந்தார். 

அவர் மரணப் படுக்கையில் தான் செய்த பாவத்தை அருட்திரு ஹன்றிவான் மிர்ஹெட்டிடம் அறிக்கை செய்து, பெட்டியையும் அவரிடம் ஒப்படைத்தார். 

அவர் அந்தப் பெட்டியைத் திருத்தந்தை 6 ஆம் உர்பனின் பிரதிநிதியாகிய கர்தினால் ப்படும் பிளேசிடம் ஒப்படைத்தார். 

பல பரிசோதனைகளுக்குப் பிறகு கர்தினால் பிளேஸ் ஜூன் 25, 1380 இல் புனிதப் பண்டமாக (Relic) அறிக்கை செய்தார். 

மதக்கலவரம் வந்த போது 1652 இல் பெல்ஜியத்தில் உள்ள ஊக்கிராடன் என்ற ஊரில் புனிதப் பண்டம் வைக்கப்பட்டிருந்தது. 

1924 ஆம் ஆண்டு மீண்டுமாக திருப்பண்டம் போக்ஸ்டெலுக்கு மூவொரு இறைவன் பெருவிழா அன்று, ஆடம்பர பவனியாக கொண்டுவரப்பட்டது. 

ஒவ்வொரு ஆண்டும் மூவொரு இறைவன் பெருவிழா அன்று புனிதப் பண்டம் சிறப்பிக்கப் படுகிறது.