அருளாளர் அலெக்சாண்டிரியா மரியா டிகோஸ்டா 1904 - 1955
போர்த்துக்கல் நாட்டிலுள்ள பலாசார் என்ற ஊரில் மார்ச் 30,1904 ஆம் ஆண்டில் அலெக்சாண்டிரியா மரியா டி கோஸ்டா பிறந்தாள். அவளுக்கு 14 வயது உள்ள போது அவள் கற்பைச் சூறையாட வந்த மூன்று மூர்க்கர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள 12 அடி உயரத்திலிருந்து ஒரு ஜன்னல் வழியாக வெளியே குதித்தாள். அதனால் ஏப்ரல் 14,1925 ஆம் ஆண்டிலிருந்து மரியா மரணம் வரை பாயும், படுக்கையுமாய் படுத்தே கிடந்தாள். இயேசுவே நீர் நற்கருணை பேழையில் ஒரு கைதியாய் இருக்கிறேன். ஆகவே, நாம் ஒருவருக்கொருவர் ஆறுதலா யிருப்போம்" என்று ஜெபித்தாள். ஒவ்வொரு திருப்பலியிலும் தன்னை இயேசுவோடு இணைத்து உலகின் பாவ அக்கிரமங்களுக்குப் பரிகாரமாக தன் வேதனைகளை ஒப்புக் கொடுப்பாள். அக்டோபர் 3,1938 லிருந்து மார்ச் 24,1942 வரை 182 முறை இயேசுவின் பாடுகளில் அவள் பங்கேற்றாள். அவள் 1942 வருடம் தன் மரணம் வரை நற்கருணையை மட்டுமே உணவாக உண்டு வாழ்ந்து வந்தாள். 1943 ஆம் ஆண்டு அவள் நற்கருணையைத் தவிர வேறு எந்த உணவும் உண்ணாமல் இருப்பதை ஓபர் கோவில் உள்ள போர்ஸ்டெல் டூரோ மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் அவளைக் கண்காணித்து வந்தார்கள். அவள் படுக்கையில் பத்து வருடங்கள் தன் வேதனைகள் எல்லா உலகின் பாவத்திற்குப் பரிகாரமாக ஒப்புக் கொடுத்து வந்த போது ஜீலை 30, 1935 இல் இயேசு அவளுக்குக் காட்சியளித்துக் கூறியதாவது, "உன்னை இவ்வுலகில் நான் வைதிருப்பதற்கு காரணம் நீ நற்கருணையை மட்டுமே உண்டு உன்னால் வாழ முடியும் என்று காட்டவே. இதுவே உலகின் ஒளியும் மீட்புமாகும். நீ உலகில் இருக்கும் போது ஏழைகளுக்காகவும், பாவிகளுக்காகவும், குருடர்களுக்காகவும் ஜெபி. அவர்கள் என் அன்பை உணரும்படி வழிகாட்டுவாயாக. என்னை நற்கருணை பேழையில் தனியாக விட்டு விடாதே! நீ என்னை அன்பு செய்வது போல் அவர்களும் என்னை அன்பு செய்யும்படி நான் எதிர்பார்கிறேன். ஆனால், யாரும் என்னைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆகவே, நான் புறக்கணிக்கப்படுவதால் மிகவும் வேதனை அடைகிறேன். " செப்டம்பர் 2,1949 ஆம் ஆண்டு தேவ அன்னை மரியாவுக்கு காட்சியளித்து, 'உலகம் பாவ அக்கிரமத்தால் அழிந்து போகிறது. ஆகவே,நீ ஜெப, தபம் செய்யும் படி நான் உன்னை கேட்கிறேன்.நீ யாரை எல்லாம் நேசிக்கிறாயோ அவர்களுக்காக ஜெபமாலை சொல்" என்றாள். செப்டம்பர் 13,1955 ஆம் ஆண்டு அலெக்சாண்டிரியா மரியா டிகோஸ்டா இறைவனடி சேர்ந்தாள். அவளுடைய இறுதி வார்த்தைகள் "நான் மோட்சம் போவதால் மிகவும் சந்தோஷமாய் இருக்கிறேன். பாவிகள் இனி பாவம் செய்ய மாட்டார்கள். என்னுடைய சாம்பலை நீங்கள் காலால் மிதியுங்கள். ஆனால் நற்கருணையில் உள்ள இயேசுவை ஒரு போதும் நிந்திக்காதீர்கள்" என்பதே.