போன்வில்லோ என்ற பதிதன், "நற்கருணையில் இயேசு உண்மையில் இல்லை, திருப்பலியில் அப்பம் அவர் திரு உடலாகவும், இரசம் திருஇரத்தமாகவும் மாறுவதில்லை.
திருப்பலி எளிய ஏழை மக்களை ஏமாற்றும் வித்தை என்றும் கூறி வந்தான்.
புனித பதுவை அந்தோணியார் அவனை நேரில் சந்தித்து, “நீ சவாரி செய்யும் கழுதை நற்கருணைக்கு முன்பு மண்டியிட்டு வணங்கினால், இயேசு உண்மையாலும் நற்கருணையில் இருக்கிறார் என்ற கத்தோலிக்க விசுவாசத்தை ஏற்றுக் கொள்வாயா?" என்று சவால் விட்டார்.
போன்வில்லாவும் சவாலை ஏற்றுக் கொண்டான்.
தன் கழுதையை இரண்டு நாட்கள் தீனி போடாமல், தண்ணீர் முதலாய்த் தராமல் பட்டினிப் போட்டான்.
குறிப்பிட்ட நாளில் மக்கள் எல்லோரும் திரண்டு வந்தனர்.
புனித அந்தோணியார் நற்கருணைக் கதிர்பாத்திரத்தை கையில் ஏந்தி வந்தார்.
போன்வில்லோவும் கழுதையை ஓட்டி வந்தான்.
பட்டினி கிடந்த கழுதைக்குப் பசும்பல்லைக் காட்டினான்.
அதுவோ அவன் பக்கம் திரும்பாமல், நற்கருணை நாதருக்கு முன்பு மண்டியிட்டு வணங்கியது.
கூடியிருந்த மக்களும் மண்டியிட்டு நற்கருணை நாதரை ஆராதித்தனர்.
அவமானப்பட்டு தோற்றுப்போன போன்வில்லோ மனம்மாறி, நற்கருணையில் இயேசு இருப்பது உண்மையே என்ற கத்தோலிக்கக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டான்.