இன்றும் நாம் கண்ணால் பார்க்கக் கூடிய ஒரு நற்கருணை அதிசயம் 1625ல் புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் திரானியில் நடந்தது (Trani, Italy). சகோதரர் பர்தலோமியா காம்பி (BARTO LOMEO CAMPI) எழுதியுள்ள அத்தாட்சிப் பத்திரத்தில் (L' JUAMOZATO DIGESTI GISTO) கூறியிருப்பது.
நற்கருணையின் மேல் விசுவாசமில்லாத ஒரு பெண் இரகசியமாக தான் வாங்கிய நற்கருணையை ஒரு கைக்குட்டையில் மறைத்து வீட்டிற்குக் கொண்டு வந்தாள். "இந்த நற்கருணை உண்மையாகவே கிறிஸ்துவின் தசை தானா என்று பார்க்க அதை ஒரு பாத்திரத்தில் இட்டு எண்ணை ஊற்றி தீ மூட்டினாள்.
உடனே நற்கருணை, உண்மை தசையாக மாறி, அதிலிருந்து இரத்தம் பீறிட்டு வந்தது. பாத்திரத்திலிருந்து துள்ளி வெளியே வந்து சமையல் அறை முழுவதும் இரத்தமயமாக மாறிவிட்டது. அவள் இந்த அதிசயத்தைக் கண்டு கூச்சலிடவே, அண்டை வீட்டார் இந்த அற்புதத்தைக் கண்டு திகைத்துப் போயினர்.
இந்தப் புதுமை பேராயருக்கு எட்டவே, அந்த அதிசய நற்கருணையை உடனே கோயிலுக்குக் கொண்டு வரும்படி உத்தரவிட்டார். சிஸ்டர்ஷியன் மடாதிபதி ஃபெர்தினான்டோ யுகெல்லி (CISTERCIAN ABBOT FERDIANDO UGHELLI) 1670 இல் எழுதியிள்ள (Italia Saga) இத்தாலிய ஆவணத்தில், "திரானியில் திவ்ய நற்கருணையை ஒரு எண்ணைப் பாத்திரத்தில் போட்டு வறுத்த போது, அது இயேசுவின் உண்மையான தசையாகவும், இரத்தமாகவும் மாறிப் பாத்திரத்திலிருந்து துள்ளி தரையில் விழுந்து விட்டது.
இது உண்மை நிகழ்வு என்பதை, புனித பியோ அடிகள். "திரானி இயேசுவின் இரத்தத்தால் புனிதமடைந்தது” என்று கூறியுள்ளார். 1616இல் இந்த அழியா நற்கருணை, வாஃபரிசியோ தெகுனியோ (FABRIZIO DECUNIO) அன்பளிப்பாக கொடுத்த நற்கருணைப் பாத்திரத்தில் புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் புனித பண்டம் இன்றும் அழியாமல் வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
ஓத்தாவியானி காம்பித்தெல்லி (OTTAVIANI CAMPITELLI), என்ற பேர் உபகாரியின் நன்கொடையால் 1706இல் அந்தப் புதுமை நடந்த வீடானது ஒரு சிற்றாலயமாகக் கட்டப்பட்டது. பல அற்புதங்களும் இந்த ஆலயத்தில் நடந்துள்ளன.
சிறப்பாக 1924இல் பேரருள் ஜியுசிப்பே மரியா லியோ (MONSIGNOR GUSEPPE MARIA LEO) தலைமை தாங்கி நடத்திய அனைத்து மறைமாவட்ட நற்கருணை மாநாட்டில் நடந்த புதுமை குறிப்பிடத்தக்கது.