தந்தையிடமிருந்து வருபவர் தூய ஆவியார். தந்தையிடமிருந்து உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார். அவர் தந்தையிடமிருந்தே வரும் உண்மையின் ஆவியானவர்" (யோவா. 15:16;14:26).
மேலும் பவுலடிகளார் தந்தையே தூய ஆவியாரை அனுப்பினார் என்றும் கூறுகிறார். நீங்கள் இறைமக்களாய்யிருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை நம் உள்ளங்களுக்குள் அனுப்பினார்(கலா.4:6)
தூய ஆவியார் தந்தையிடமிருந்து வந்தவர் மட்டுமல்ல தந்தையின் உள்ளத்திலே குடிகொண்டு வாழ்பவர். இதை பவுலடிகளார் "தூய ஆவியார் எல்லாவற்றையும் ஊடுருவிக் காண்கிறார் கடவுளின் உள்ளத்தில் இருப்பதை கடவுளின் ஆவியேயன்றி வேறோருவரும் அறியார்" என்று கூறுகிறார் (1 கொரி. 2:10)