புனித தார்சிசியுஸ் (St. Tarcisius) 3 நூற்றாண்டு
உரோமை பேரரசன் கிறிஸ்தவர்களை எல்லாம் சிறையில் அடைத்து, சித்தரை செய்து கொன்றான். தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கிறிஸ்தவர்கள் சுரங்கங்களிலே தஞ்சம் புகுந்தனர்.
திருப்பலி இரகசியமாகவே நடந்தது. "தார்சிசியுஸ்' என்ற சிறுவன் சிறையிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு நற்கருணை வழங்க முன்வந்தான்.
சிறுவன் தார்சிசியுஸ் நற்கருணையை மறைவாய் எடுத்துச் சென்று போது சில மத விரோதிகள் அவனை வழிமறித்தார்கள்.
மதவெறியர்கள் நற்கருணைக்கு அவமரியாதை செய்வார்கள் என்று அறிந்த தர்சிசியுஸ் இயேசுவுக்காக தன் உயிரையே பலியாக கொடுத்தான் என்று முதலாம் டாமசெஸ் என்ற திருத்தந்தை எழுதி அவைத்துள்ளார்.
புனித தர்சிசியுஸ் தான் புதுநன்மை வாங்கும் சிறார்களுக்குப் பாதுகாவலர்.