நிறைவுரை

'நற்கருணை நாதர்" நம் கத்தோலிக்கர்களுக்கு, நற்கருணையின் பேருண்மையை விவிலிய அடிப்படையில் விளக்கி, விசுவாசத்தை ஆழப்படுத்தி, இயேசுவின் இறைப் பிரசன்னத்தை நன்கு உணர்ந்து, அவரோடு நெருக்கமான, நிச்சயமான, நிரந்தரமான அன்புறவில் ஒன்றித்து வாழ வழிகாட்டும் என்று உறுதியாக நம்புகிறேன். க

1. இறைவனுக்கு நாம் செலுத்தக்கூடிய மேலான பரிகாரப் பலி, இயேசுவே, புனித தந்தை பியோ கூறுவது போல், "உலகம் இன்று பாவச்சேற்றில் மூழ்கிக் கிடக்கிறது. இறைவனின் கோபத்தைத் தணிப்பது திருப்பலியே." எனவே நாம் தினமும் பக்தியோடு. விசுவாசத்தோடு திருப்பலியில் முழுமையாக பங்கெடுக்க வேண்டும்.

2. இயேசுவே தம் உடலையும் இரத்தத்தையும் உண்மையான உணவாக, பானமாகக் கொடுக்கிறார். அவரோடு நாம் இணைகின்றோம். ஓர் உடல், ஓர் உயிராகிறோம். இயேசுவில் பிறரோடு ஒன்றிணைகிறோம். நாம் பாவத்திலிருந்தும், பாவகட்டுகளிலிருந்தும், உலக நாட்டம், உடல் இச்சை, அலகையின் பிடியிலிருந்து முழுமையாக பெற்று கிறிஸ்துவாக மாறுகிறோம்.

3. நற்கருணையில் உடனிருந்து செயல்படும் இயேசுவை நாம் அடிக்கடி சந்தித்து, ஆராதித்து, வாழ்த்திப் போற்றி துதிக்கும் போது, அவருக்குப் பிரதி அன்பு காட்டுகிறோம். உலகில் நற்கருணை நாதருடன் செலவிடும் நேரமே. நாம் செலவிடும் மிகச் சிறந்த நேரமாகும். நற்கருணை ஆண்டைக் கொண்டாடும்படி பணித்த புனித திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் ஒரு நாளில் 60 முறை நற்கருணை சந்திப்பு செய்ததாக வத்திக்கானில் உள்ள ஒரு கர்தினால் கூறுகிறார். ஏனெனில் நற்கருணை பேழையில் உனக்காகவே காத்திருக்கும் இயேசு, உன் வரவை பேராவலுடன் எதிர்பார்க்கும் சிறைக்கைதியைப் போல் ஏங்குகிறார். "இன்று நற்கருணை ஆராதனை, உலகிற்கும், திருச்சபைக்கும் மிக அவசியம்" என்று அவரே கூறுகிறார். "சிலுவையைப் பார்க்கும் போது, இயேசு உன்னை எவ்வளவு நேசித்தார் என்று உணர்கிறாய். நற்கருணை நாதரை பார்க்கும்போது, அவர் உன்னை இன்று எவ்வளவு நேசிக்கிறார் என்று உணர்கிறாய்" என்கிறார் புனித அன்னை தெரசா. புனித மார்கரட் மேரியிடம் இயேசு கூறினார், "நற்கருணை ஆராதனை மனிதர் செய்யும்படி என் உள்ளம் தாகத்தால் பற்றி எரிகிறது."

விண்ணரசு நல்ல முத்துக்களைத் தேடும் வணிகனுக்கு ஒப்பாகும் (மத் 13:46). அதைக் கண்டதும் தனக்குள்ளதெல்லாம் விற்று அதை வாங்கிவிடுவான். நற்கருணை ஆராதனை மண்டபம் உலகில் உள்ள எல்லா முத்து, இரத்தினம், வைடூரியம், கோமேதகம் நிறைந்துள்ளது. அதை யாரும் எப்போதும், எவ்வளவு வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னால் யாராவது அதை எடுக்காமல் இருப்பார்களா? "கிறிஸ்துவே அந்த புதைப்பொருள். அவருள்ளே இறைவனின் ஞானமும், அறிவுமாகிய செல்வம் அனைத்தும் மறைந்துள்ளது" (கொலோ 2:3). நற்கருணை நாதர் தன் இறை பிரசன்னத்தால், நம் பாவத்தை எல்லாம் போக்கி, பயத்தை நீக்கி, மனக்கவலையையும், குழப்பத்தையும் ஒழித்து, நம் மனதிற்கு ஆறு தலையும், உள்ளத்திற்கு உறுதியையும் அளித்து,அருளைப் பொழிந்து, நம்மை உற்சாகப்படுத்தி, திடப்படுத்தி, ஆறுதல் அளிக்கிறார். அவரே கூறியது போல்,"பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறு தல் தருவேன்" (மத் 11:28).

இயேசு, வசூலா ரிடனிடம் கூறியது போல், எப்போது அனைத்துத் திருச்சபையும் (கத்தோலிக்கர், ஆர்த்தடாக்ஸ், பிரிந்த சபைகள்) ஒன்றிணைந்து நற்கருணை பலியில் பங்குகொள்கிறார்ளோ, அன்றே ஒரே மந்தையும், ஒரே ஆயரும் என்ற நிலை ஏற்படும். (யோவா 10:16) இயேசுவின் இறுதி மன்றாட்டு விரைவில் நிறைவேறும்.