புனித சீயன்னா கத்ரீன்

புனித சீயன்னா கத்ரீன் 1347 - 1380 (திருநாள் ஏப்ரல் 29)

இளமையிலேயே டோமினிக் துறவற சபையில் சேர்ந்து மிகவும் புகழ்பெற்ற புனிதை கத்ரீன். 12 ஆம் பத்திநாதர் இவளை இத்தாலி நாட்டின் துணைப்பாதுகாவலியாகவும் திருத்தந்தை 6 ஆம் சின்னப்பர் இவரை இறைவல்லுனராகவும். திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் இவளை ஐரோப்பாவின் இணைப் பாதுகாவலியாகவும் அறிவித்தனர். என்பதே இவளின் புகழுக்குச் சான்று. இயேசு இவளுடன் நேரடியாக உரையாடியதை "Dialogue" என்ற நூலில் எழுதியுள்ளார். இயேசு கூறியதாவது, "தகுதியுடன் நற்கருணை வாங்கும் ஒர் ஆன்மா எத்தகைய மேலான நிலையை அடைகிறது என்று எண்ணிப்பார். என் ஆருயிர் ஆன்மா என்னில் இருக்கிறது. நானும் அதனுள் இருக்கிறேன். எப்படி கடலுக்குள் மீன் இருக்கிறது. பரிசுத்தமான நிலையிலே நற்கருணை வாங்கியதால் அருள் அந்த ஆன்மாவில் தங்கியுள்ளது. நற்கருணை உட்கொண்ட பிறகு மெழுகுவத்தியில் முத்திரை பதிந்து விடுகிறதோ அதேபோல் என் அருளின் முத்திரை அந்த ஆன்மாவில் விட்டுச் செல்கிறேன்."