புனித காஸ்பார் டெல் புவாலோ 1786 - 1837
புனித காஸ்பார் திருஇரத்தத்தின் வேதபோதக சபையை நிறுவினார் (Missionaries of the Most Precious Blood) திருஇரத்தத்தின் பக்தியைப் பரப்ப அரும்பாடுபட்டார். நமக்காக இரத்தம் சிந்திய மீட்பர் இயேசுவையும், நற்கருணை நாதரையும் அதிகம் நேசிக்கும்படி எடுத்துரைத்தார். நற்கருணை நம் ஆண்டவரின் பாடுகளையும் மரணத்தையும் நினைவு கூறுவதால் சாத்தான் திருவுடல், திருஇரத்தத்தைக் கண்டு அஞ்சி ஓடுகிறது. என் இயேசுவே நீர் நற்கருணையில் எவ்வளவு நிந்தை அவமானம் படுகின்றீர் என்று எண்ணும் போது என் உள்ளம் உருகிறது. உம்முடைய அளவற்ற தாழ்ச்சியைக் கண்டு நான் வியப்படை கிறேன். " புனித காஸ்பார் நற்கருணை நாதரை அடிக்கடி சந்தித்து பல மணி நேரம் செலவிடுவார். அவருக்கு நற்கருணையே வாழ்வின் மையமும், புனிதத்தின் ஆரம்பமும், முடிவுமாகும் என்று கூறினால் அது மிகையாகாது.