குரூஆரோ 1454

குரூஆரோவில் உள்ள புனித ஜியுஸ்டோ என்ற தேவாலயத்தின் பீடத்துணிகளை துவைப்பதற்காக, ஒரு பணிப்பெண் வெர்சியோலா என்ற இடத்திற்கு எடுத்துச் சென்றாள் (Gruaro Valvasone, Italy). 

அந்தப் பீடத்துணியின் மடிப்பில் ஒரு வசீகரம் பண்ணப்பட்ட நற்கருணை இருப்பதையும், அதிலிருந்து இரத்தம் கசிவதையும் கண்டு அதிர்ச்சியுற்றாள். 

உடனே இந்த அற்புதத்தைப் பங்கு தந்தையிடம் சென்று தெரிவித்தாள். 

அவரும் கொன்கோர்டியா ஆயரான ஜியாக்கோமோ டி ஒத்தோனல் லோவுக்கு தெரிவித்தார். 

ஆயர், புதுமை பற்றிய நிகழ்வை முழுமையாக விசாரித்தார். 

திருப்பண்டத்தை கொள்கோர்டியா பேராலயத்தில் வைத்திட எண்ணினார். 

ஆனால் குரூரோ பங்கு குருவும், வால்வாசோமே புரவலரும், திருப்பண்டத்தை குரூ ஆரோவிலேயே வைத்துக்கொள்ள எண்ணினார். 

இந்த கருத்து வேறுபாட்டினால், திருத்தந்தை 5ம் நிக்கோலாசின் ஆலோசனையை நாடினார். 

திருத்தந்தை வால்வாசோனே புரவலருக்கே திருப்பண்டத்தை அளித்து குரூஆரோவில் இயேசுவின் திருவுடல் ஆலயம் கட்டப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். 

அதன்படியே 1483இல் இயேசுவின் திருவுடல் ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டது. 

இந்த புதுமை பற்றிய ஆவணத்தில் திருத்தந்தை 5ஆம் நிக்கோலாஸ், புனித மரியாள், புனித யோவான் என்ற தேவாலயத்தின் பெயரை மாற்றி, “இயேசுவின் திருவுடல் ஆலயம்" என்று பெயரிட்டு, மார்ச் 28, 1454இல் ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இந்தப் புனித திருப்பண்டத்தை ஆண்டுதோறும் தபசு காலத்தில் வரும் 5ஆம் வியாழக்கிழமை, ஆடம்பரமாக, குருக்களும், இறை மக்களும் பவனியாக எடுத்துச் செல்கின்றனர்.