சியன்னா, இத்தாலி 1730

மாக்கி எழுதியுள்ள ஆவணத்தின்படி ஆகஸ்டு 14, 1730இல் திருடர்கள் சியன்னாவில் உள்ள புனித பிரான்சிஸ் ஆலயத்திலிருந்து 351 நற்கருணை உள்ள பொற்பாத்திரத்தைத் திருடிச் சென்றனர் (Siena, Italy). 

121 நற்கருணையை அருந்திவிட்டனர். பிறகு புரோவன்கானோ (Provengano) என்ற இடத்தில் புனித மரியாள் ஆலயத்தில் உள்ள உண்டிபெட்டியில் 230 நற்கருணையும் கெடாமல், அப்படியே இருந்ததைக் கண்டுபிடித்தனர். 

உடனே அவைகளை ஆடம்பரமாக புனித பிரான்சிஸ் ஆலயத்திற்கு எடுத்துச் சென்றனர். 276 ஆண்டுகள் கழிந்தும் நற்கருணையில் எந்த மாற்றமும், குறையுமின்றி அன்று போல் இன்றும் உள்ளன. 

பேராயர் டிபேரியோ போர்கேசே (ARCHBISHOP TIBERIO BOZGHESE) வசீகரம் பண்ணப்படாத சாதாரண ஓஸ்தியை ஒரு பெட்டியில் வைத்து முத்திரையிட்டார். பத்து ஆண்டுகள் கழித்து அந்தப் பெட்டியை திறந்த போது, எல்லா ஓஸ்தியும் பூச்சி அரித்துப் போய்விட்டன. 

230 நற்கருணையை பல சோதனைகள் செய்த பிறகு என்றிக்கோ மேதி (ENRICO MEDI) என்ற விஞ்ஞானி அறிக்கையிட்டு கூறியதாவது, “இந்தப் புதுமை இறைவனின் நேரடி செயல். இத்தனை நூற்றாண்டுகளாக நற்கருணை (வசீகரம் பண்ணப்பட்ட அப்பம்) கொஞ்சமும் கெடாமல் இருப்பதே, இயேசு உண்மையில் நற்கருணையில் நிரந்தரமாக உள்ளார் என்பதை நிரூபிக்கின்றது" 

1914இல் புனித பத்தாம் பத்திநாதர் ஒரு விஞ்ஞானிகளின் குழுவை ஏற்படுத்தினார். "சியன்னாவில் உள்ள 230 நற்கருணை 1730இல் வசீகரம் செய்யப்பட்ட (Consecrated) இயேசுவின் உண்மையான திருவுடல். 

இவை இயற்கை விதிகளுக்கு முற்றும் அப்பாற்பட்ட அதிசயமான, ஆச்சரியத்திற்குரிய புதுமை என்பது விஞ்ஞான சரித்திரத்திலேயே இதுவரை நடந்திராத ஓர் அற்புதம்" என்று அறிக்கையிட்டுள்ளது.