புனித கத்ரீன் டிரக்சல் 1858-1955
கத்ரீன் அமெரிக்காவில் மிகவும் பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். அவர்கள் ஏழைகளுக்கும், சமுதாயத்தால் ஓரங்கட்டப் படவர்களுக்கும் தராளமாய் உதவி செய்து வந்தனர். கத்ரீன் மிகவும் பெரிய சொத்துக்கு வாரிசாக இருந்ததால் சுதேச அமெரிக்கர்களுக்கும், ஆப்பிரிகர்களுக்கும் அவர்களுடைய ஏழ்மையையும், அவல நிலையையும் கண்டு உதவி செய்ய முடிவு செய்தார் கத்ரீன். ஒரு முறை உரோமைக்குச் சென்ற போது திருத்தந்தை 13 ஆம் சிங்கராயரிடம் இந்த அமெரிக்க ஏழை மக்களுக்குத் தொண்டு செய்ய மிஷினரிமார்களை அனுப்பும்படி வேண்டிக் கொண்டார். திருத்தந்தையோ, "நீங்களே ஏன் மிஷினரியாய் பணி செய்யக் கூடாது?" என்று கேட்டார். அதைக் தோகை கேட்டு ஆச்சரியப்பட்ட கத்ரீன் அமெரிக்கா திரும்பியதும் தனது ஞான ஆலோசகரின் ஆனுமதி பெற்று பெண்களுக்கென்று ஒரு புதிய துறவற சபையை நிறுவினார்.
கத்ரீன் நற்கருணை நாதரை ஆராதிப்பதில் தன் வாழ்நாள் எல்லாம் செலவிட முடிவு செய்தார். ஆகவே, தான் நிறுவிய துறவற சபைக்கு "நற்கருணை நாதரின் அருட்சகோதிரிகள்" என்ற பெயரைச் சூட்டினார் அதன் குறிக்கோள் அமெரிக்கர்களையும், நீக்ரோ அமெரிக்கர்களையும் நற்கருணை நாதரிடம் கொண்டு வருவதே. அன்னை கத்ரீன் எதைச் செய்தாலும் நற்கருணை நாதர் சமூகத்திலேயே முடிப்பார். அன்று சமுதாயத்தில் நிலவிய இனவெறியையும், நிறவெறியையும் முன்சார்பு மனநிலையையும் முறியடிக்க வேண்டிய ஆற்றலையும், ஆலோசனையையும் அவளுக்குக் கொடுத்தது நற்கருணை நாதரே. அவர் நற்கருணை நாதர் சந்நிதானத்தில் பெற்ற ஆற்றலாலேயே தன்னை முழுமையாக தாழ்த்தப்பட்ட சகோதர சகோதரிகளுக்கு அர்ப்பணிக்க முடிந்தது என்றால் மிகையாகாது.
தன்னை முழுமையாக அர்ப்பணிப்பதில்தான் உண்மையான நற்கருணை பக்தி உள்ளது. நற்கருணை பெற்ற பிறகு எழுந்து சென்று பாமர மக்களிடம் இயேசு இருப்பதைக் கண்டுணர்ந்து அவர்களுக்குப் பணி செய்வது இயேசுவுக்கே பணி செய்வதாகும் என்று கூறுவார்கள். அன்னை அல்லும் பகலும் ஓய்வின்றி மிஷினரி மையங்களையும், பள்ளிகளையும், பல்கலைக் கழகத்தையும் நிறுவுவதில் தன் முழு நேரத்தையும், உழைப்பையும் செலவிட்டார். இதனால் 1935 ஆம் ஆண்டு மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள். அன்று முதல் 1975 ஆம் ஆண்டு வரை தன் நேரத்தை எல்லாம் நற்கருணை நாதர் பிரசன்னத்தில் ஜெப ஆராதனையில் செலவிட்டுப் புனிதையாக இறைவனடிச் சேர்ந்தார்கள்.