வெயின்கார்டன் 33

900 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட மிகப் புனிதமான திருப்பண்டம், இயேசுவின் விலாவை, சிலுவையில் தொங்கிய போது, லொஞ்சினுஸ் என்ற உரோமைப் போர்வீரன் ஈட்டியால் குத்தித் திறந்த போது பீறிட்டு வழிந்த திருஇரத்தமே. 

அதுவே வெயின்கார்டன் என்ற ஊரில் ஆசீர்வாதப்பர் துறவற சபை மடத்தில் இன்றும் உள்ளது (Weingarten, Germany). சரித்திர ஆதாரப்படி லொஞ்சினுஸ் இயேசுவின் திருஇரத்தத்தை மாண்துவா (Mantua)வுக்கு எடுத்துச் சென்றான். 

யோவான் நற்செய்தியின்படி, (யோ 19:34). "ஆனால் படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினான். உடனே இரத்தமும், தண்ணீரும் வடிந்தன என்றும், செக்காரியா (செக் 12:10) படி, "அப்போது அவர்கள் தாங்கள் ஊடுருவக் குத்திய வரையே உற்று நோக்குவார்கள்; அவரை உற்று நோக்கி ஒரே பிள்ளையைப் பறிகொடுத்து ஓலமிட்டு அழுபவரைப் போலும், இறந்துபோன தம் தலைப்பிள்ளைக்காகக் கதறி அழுபவர் போலும். மனம் கசந்து அழுவார்கள்" என்ற இறைவாக்கும் நிறைவேறியது. 

இந்தத் திருப்பண்டத்தை (கட்டியாய் உறைந்த) பல கிறிஸ்துவ அரசர்களுக்கும், திருத்தந்தையர்களுக்கும் சிறப்பாக சார்ல்மேன் என்ற அரசருக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டது. மிகப்பழமையான ஆவணத்தின்படி 1055இல் 3ஆம் ஹென்றி என்ற பேரரசருக்கு கொடுக்கப்பட்டது என்றும், அவர் பால்தோவினோ (BALDOVINO OF FLANDERS) என்ற பிரபுவுக்கு கொடுத்தார் என்றும், அவர் அந்தத் திருப்பண்டத்தைத் தன் மகள் ஜுடித்துக்கு விட்டுச் சென்றார் என்றும் கூறுகிறது. 

ஜுடித்து பாவேரியா மன்னன் குல்வோவை திருமணம் செய்தபோது (GUELFO IV OF BAVARIA) தன் கணவருக்குக் கொடுத்ததாகவும், அவர் திருப்பண்டத்தை வெயின்கார்டன் ஆசீர்வாதப்பர் மடாதிபதி விச்சோனிடம் (ABBOT WILICHUN) ஒப்படைத்ததாகவும் ஆவணம் கூறுகிறது. 

ஆண்டுதோறும் வெயின்கார்டனில் (The Ride) குதிரைப்படை (3000) பவனி ஒன்று எல்லா பங்குகளிலிருந்தும் குருக்கள் வந்து சிறப்பித்து வருகிறார்கள்.