புனித அசிசி பிரான்சீசின் ஆலோசனைப்படி, "ஏழைச் சகோதரிகளின் சபையை புனித கிளாரா ஏற்படுத்தினார்.
கடின தபமும், இரவும், பகலும் நற்கருணை ஆராதனை செய்வதும் தான் அவர்கள் துறவற வாழ்வு!
நற்கருணை நாதரே அவர்களின் வாழ்வின் ஊற்றும், உந்து சக்தியும், மையமுமாக இருக்கிறார் Saint Clare of Assissi, Italy.
ஒரு நாள் சாரசன் (Sarasans) என்ற மத விரோதிகள் அசிசி நகரைத் தாக்கி, புனித கிளாரம்மா மடத்தை நோக்கிப் படை எடுத்து வந்தனர்.
குதிரைப்படை ஆவேசத்துடனும், ஆரவாரத்துடனும் வருவதைக் கண்ட கன்னியர்கள் எல்லாம் கண் கலங்கினர்.
ஆனால் புனித கிளாரா அஞ்சா நெஞ்சத்தோடு. நற்கருணை கதிர்பாத்திரத்தை கையில் ஏந்திக் கொண்டு கன்னியர் புடை சூழ வட்டக் கண்ணாடி ஜன்னல் முன்பு வந்து நின்றாள்.
நற்கருணை நாதரைக் கண்ட கொள்ளைக் கூட்டம், சூரியனைக் கண்ட பனிபோல ஓடி மறைந்தது.
இன்றும் அசிசியில் (SAN DAMIANO) உள்ள புனித டாமியான் மடத்தையும், வட்ட வடிவான கண்ணாடி ஜன்னலையும் பார்க்கலாம்.
கிளாரிஸ்ட் என்று அழைக்கப்படும் கன்னியர் சபையைச் சேர்ந்தவர் தான், இந்தியாவின் முதல் புனிதை அல்போன்ஸா. (கேரளாவில் பர்னங்கானத்தில் அவர் கல்லறை உள்ளது.)