நற்கருணை அருட்சாதன பலிப்பொருள் மட்டுமல்ல அது அருட்சாதன உணவாகும். கப்பர்நாகுமுக்குச் சென்ற யூதர்கள், நாங்கள் உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர். எங்கள் முன்னோர் பாலைவனத்தில் மன்னாவை உண்டனரே" என்றார். இயேசு "அவர்களிடம் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் வானிலிருந்து உங்களுக்கு உணவு அருள்பவர் மோசே அல்ல வானிலிருந்து உங்களுக்கு உணவு அருள்பவர் என் தந்தையே கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அழிக்கிறது" என்றார் (யோவா. 6:30-33). இயேசு தந்தையே உணவு அளிக்கிறார். என்றும், அந்த உணவு உண்மையான உணவு என்றும், அது உலகுக்கு வாழ்வு தரும் உணவு என்றும் உறுதியாகச் சொல்கிறார். அவர்கள், "ஜயா இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்" என்று கேட்ட போது "வாழ்வு தரும் உணவு நானே, என்னிடம் வருபவருக்கு பசியே வராது. என்னிடம் நம்பிக்கை கொண்டு குடிப்பவருக்கு என்றுமே தாகம் இராது' (யோவா.6:34-35) "இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா நான் விண்ணிலிருந்து இறங்கி வந்தேன் என இவர் எப்படிச் சொல்லலாம்?" என்று பேசிக் கொண்டனர். யூதர்கள் இயேசு கூறிய வார்த்தைகளை நன்றாகவே புரிந்து கொண்டனர். விண்ணிலிருந்து வரும் உண்மையான உணவு, வாழ்வு தரும் உணவு நானே", என்று இயேசு சொன்னது தன்னைப் பற்றியே என்பதை யூதர்கள் புரிந்து கொண்டனர். அவர் உருவகத்தில் பேசவில்லை என்பது அவர்களுக்கு தெளிவாகப் புரிந்திருந்தது. மேலும் இயேசு. "வாழ்வு தரும் உணவு நானே" என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றார். "என்னை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர். வாழ்வு தரும் உணவு நானே, உங்கள் முன்னோர் பாலைவனத்தில் மன்னாவை உண்ட போதிலும் இறந்தனர் உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே" (நானே இந்த உணவு) யோவா. 6:47-50 என்றார்.
இயேசு மீண்டுமாக வாழ்வு தரும் உணவு நானே என்பதை அடுத்த வரியில் வற்புறுத்துகிறார். விண்ணிலிருந்து இறங்கி வந்த வாழ்வு உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வர். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன்" (யோவா. 6:51) தன் சதையைததான் இயேசு உணவாகக் கொடுக்கிறார் இந்த சதையை உண்போரை இறவாமல் இருக்கச் செய்யும் மெய்யான உணவு, இதை உலகம் உய்யவே இயேசு தருகிறார். "நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படி கொடுக்க இயலும். ? என்ற வாக்குவாதம் யூதர்களிடையே எழுந்தது. அதை அறிந்த இயேசு, "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். மானிட மகனுடைய சதையை உண்டு இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள். எனது சதையை உண்டு இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர். நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். வாழும் தந்தை என்னை அனுப்பினார் நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்." (யோவா. 6:53-57) இயேசுவுடைய அன்புச் சீடர் யோவான் தன் குருவும் தலைவருமான இயேசுதான் தன்னையே நற்கருணை வழியாக உணவாகவும் பானமாகவும் கொடுக்கப்போவதை நன்றாக புரிந்து கொண்டார். வேறு எந்த நற்செய்தியாளரும் நற்கருணை வழியாக உணவாகவும், பானமாகவும் கொடுக்கப்போவதை நன்றாக புரிந்து கொண்டார். வேறு எந்த நற்செய்தியாளரும் நற்கருணை விருந்தைப்பற்றி இவ்வளவு தெளிவாக விளக்கம் கொடுக்கவில்லை, விரித்துரைக்கவில்லை. யோவான் நற்செய்தி அலகு 6, வசனம் 41 முதல் 58 வரை இயேசு விண்ணிலிருந்து இறங்கி வந்த உணவு நானே, என்றும் அது வாழ்வு தரும் உணவு அதை உண்போர் என்றும் சாகமாட்டார்" என்றும் தந்தையே அவரை அனுப்பினார், ஆகவே அவரை உண்போரும் நிலைவாழ்வு பெறுவர் என்பதை பத்து முறையாவது வலியுறுத்திக் கூறுகின்றார். இயேசு உருவகமாகப் பேசவில்லை உண்மையாகவே தம் சதையை உண்ண வேண்டும் தன் இரத்தத்தை குடிக்க வேண்டும் என்று நன்றாகப் புரிந்துகொண்ட யூதர்கள் இதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம். இப்பேச்சை இன்னும் கேட்டுக் கொண்டிருக்க முடியுமா?" என்று பேசிவிட்டு அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை (யோவா.6:60-66). அப்போது இயேசு பன்னிரு சீடர்களிடம் ஒரு கேள்வி கேட்டார். "நீங்களும் போய் விட நினைக்கிறீர்களா? அதற்குச் சீமோன் பேதுரு, "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம். நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம் அதை நம்புகிறோம்" (யோவா.6:68-69).
மன்னாவைப் பற்றிப் பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில், அதை உண்ட அனைவரும் இறந்தார்கள். ஆனால், இயேசு தரப்போகும் உணவோ உயிருள்ள உணவு, தெய்வீக உணவு, வானத்திலிருந்து இறங்கி வந்த நித்திய வாழ்வு அளிக்கும் உணவு. மன்னாவைப் போல் வெறும் உணவுப் பொருள் அல்ல அது நானே" என்ற மனுவுருவான இயேசு என்ற தமத்திருத்துவத்தின் இரண்டாம் ஆள். மூவொரு இறைவனில் ஒரே பொருளானவர். உயிருக்கெல்லாம் ஊற்றானவர் வாழும் தந்தையே இயேசுவை அனுப்பினார். ஆகவே அவரை உண்போரும் நிவைாழ்வைக் கொண்டுள்ளனர். தாம் தரப்போகும் உணவு சாதாரண உணவு அன்று பலி உணவு என்பதை வலியுறுத்த, "நான் அளிக்கும் உணவு உலகம் உய்வதற்காகப் பலியாகும் என் தசையே" என்று உண்மையை வலியுறுத்துகிறார். மன்னா உடலை மட்டும் காப்பாற்றும் உணவாக மட்டும் இருந்தது. மீட்பர் இயேசு அளிக்கும் உணவோ பலியான உணவு நிலைவாழ்வு தரும் தெய்வீக உணவு. மன்னா அன்றாடம் சேகரித்து ஒவ்வொரு நாளும் உண்ணவேண்டிய உணவு (வி.ப.16:4) இதை மனதிற்கொண்டே நம் ஆண்டவர், "எங்கள் அனுதின உணவை எங்களுக்கு அளித்தருளும்" என்று மன்றாடச் சொன்னார். நம் ஆன்மா உயிர்த்தெழ நம் அன்றாட உணவாகிய நற்கருணை அவசியமாகிறது (யோவா. 6:54).
இயேசு இவ்வுலகிற்கு வந்த காரணம்? தன் விருப்பத்தை அல்ல தன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றவே அவர் இவ்வுலகிற்கு வந்தார். அந்தத் தந்தையின் விருப்பம் என்ன? இயேசுவிடம் ஒப்படைக்கப்பட்ட அனைவரும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்ய வேண்டும் என்பதே (யோவா. 6:38-40) மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுள்ளம். "நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்" (யோவா. 6:40) நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வு பெறுவது எப்படி? அந்த நிலைவாழ்வை பெற விருப்புவோர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இயேசுவின் சதையை உண்ண வேண்டும் அவர் அவர் இரத்தத்தைக் குடிக்கவேண்டும் அவருடைய சதையை உண்ணாமல் அவர் இரத்தத்தைக் குடிக்காமல் நிலைவாழ்வு பெற முடியாது (யோவா. 6:53) கர்
கத்தோலிக்கத் திருச்சபை திருப்பலியை, தினமும் நிறைவேற்றி நற்கருணையை தினமும் கொடுக்கிறது என்றால் அது இறைவனின் திட்டம். இது இயேசுவின் சித்தம். சூரியன் தோன்றும் முதல் மறையும் வரை திருப்பலி இரவும் பகலும் உலகம் முழுவதும் செலுத்தப்படுகிறது. ஆராதனையும், நன்றியும், திருவிருந்தும் தொடர்ந்து நடைபெறுகிறது. திருப்பலி என்றும் ஒரு மறை பொருளாகவே இருக்கும். "என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்" (யோவா. 6:44-45) 6:44-45) கடவுள் தாமே அனைவருக்கும் கற்றுத்தருவார். தந்தைக்குச் செவி சாய்த்து அவரிடம் கற்றுக் கொண்ட அனைவரும் இயேசுவிடம் வருவார் (யோவா.6:45).