புனித மரிய வியான்னி அருளப்பர்

புனித மரிய வியான்னி அருளப்பர் கி.பி. 1786-1859 (திருநாள் ஆகஸ்ட் 4)

பங்குத் தந்தையர்களின் பாதுகாவலர் பிரான்ஸ் நாட்டில் டார்டில்லி என்ற ஊரில் விவசாயக் குடும்பத்தில் ஆறு பிள்ளைகளில் நான்காவதாகப் பிறந்தவர். சிறு வயதில் பள்ளிக்குப் போய்விட்டு நின்றவர். மீண்டும் 18 ஆவது வயதில் குருவாக ஆவல் கொண்டு குருமடத்தில் சேர்ந்தார். இலத்தீன் மொழி அறிவுத் திறன் மிகக்குறைவு என்பதால் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். ஆனால், அவரது ஞானத்தையும், ஆர்வத்தையும், விவேகத்தையும் கண்டறிந்த ஆசிரியர் மறை நூலை தாய்மொழியிலேயே (பிரெஞ்சு) கற்றுத் தந்தார். 25 ஆவது வயதில் குருப்பட்டம் பெற்றார்.

"மறைமாநிலம் முழுவதும் மனம் திரும்ப வேண்டுமா? அவ்வாறாயின் எல்லாப் பங்குத்தந்தையரும் புனிதர்களாக வாழ வேண்டும்" என்று ஆயரிடம் கூறினார். அதே போல் புனிதராக வாழ்ந்து ஆர்ஸ் சிற்றூரில் ஏறத்தாழ 230 பேர் கொண்ட இறைமக்களை மனம்திருப்பினார். அப்பங்கில் நிலவிய நாத்திகம், சூதாட்டம், குடிவெறி, விபச்சாரம் போன்ற தீமைகளை தம் நீடிய ஜெபம் கடுந்தபம், அயராத உழைப்பால் சிறிது சிறிதாக களைந்தார். அதற்கு அடிப்படைக் காரணம் அவரது நற்கருணை பக்தியே. -க் காரணம் அவது பாவிகள் மனந்திரும்ப பல மணி நேரம் நற்கருணை நாதர் முன் மண்டியிட்டு ஜெபித்தார். பத்து ஆண்டுகளுக்குள் குடிவெறி, களியாட்டம் நின்றது. பாவிகளும் அவர் அறிவுரையை நாடி வந்தனர். நூற்றுக்கனக்கான மக்கள் தினமும் பாவமன்னிப்பு பெற்று திருப்பலியில் பங்கு கொள்வர். ஆர்ஸ் கிராம மக்களை யாராலும் மனந்திருப்ப முடியாது என்ற கூற்றை தம் நீடிய நற்கருணை பக்தியாலும், கடுந்தப முயற்சியாலும், விடா முயற்சியாலும், நீடித்த பொறுமையாலும் பொய்மையாக்கினார். அவர் இன்று பங்குக் குருக்களுக்கு முன்னோடியாகவும், பாதுகாவலராகவும் விளங்குகிறார்.