1589இல் ஓவியுஸ் என்ற துறவி எழுதிய கோப்பிலிருந்து வால்டூர்ன் என்ற இடத்தில் ஒரு புதுமை நடந்தது (Walldurn Germany).
அருட்திரு என்றிக் ஓட்டா என்ற குரு திருப்பலி செய்யும் போது, எழுந்தேற்றத்திற்குப் பிறகு, திருப்பலிப் பூசைப் பாத்திரத்தை அறியாமல் தட்டிவிட்டார்.
உடனே திருஇரத்தம் பீடத்துணியின் (Corporal) மேல் சிந்தியது மல்லாமல், இயேசு சிலுவையில் தொங்கிய உருவமும், அதைச் சுற்றி முள்முடி சூட்டப்பட்ட இயேசுவின் திருமுகங்களும் காணப்பட்டன.
இதைக் கண்ட குரு மிகவும் பயந்துபோய், இந்தக் காட்சியை யாரிடமும் சொல்லாமல், இரத்தக்கறை பதிந்த பீடத் துணியை மரணம் வரை மறைவாய் ஒளித்து வைத்திருந்தார்.
மரணநேரத்தில் இந்தப் புதுமையான துணி எங்கு உள்ளது என்று அறிவித்தார்.
திருத்தந்தை நான்காம் யூஜின் 1445இல் இது உண்மையான புதுமை என்று ஆவணத்தை எழுதிக்கொடுத்தார்.
இப்போது உள்ள பேராலயம், பேராயர் பிரான்ஸ் லோதார் வான் ஸ்கான்பார்ன் என்பவரால் 1698இல் ஆரம்பித்து 1728இல் கட்டி முடிக்கப்பட்டது.
திருத்தந்தை 23ஆம் அருளப்பர் 1962இல் இதைப் பேராலயமாய் உயர்த்தினார்.