லிதுவேனியர், போலந்து நாட்டின் மீது படை எடுத்தபோது, குலோத்தோவோ கிராமத்துக் குருவானவர், ஒரு தங்கத்தாலான திருப்பலிப் பாத்திரத்தை யாருக்கும் தெரியாமல் மண்ணில் புதைத்து வைத்தார் (Glotowo, Poland).
லிதுவேனியர்கள் படை எடுத்து, ஊரையும் ஆலயத்தையும் தரைமட்டமாக்கி விட்டனர்.
புதையுண்டிருந்த தங்கத்தாலான திருப்பலிப் பாத்திரத்தைப் பற்றி யாருக்கும் தெரியாது.
ஓர் உழவன் ஏறு உழுதும்போது, ஒரு பெரிய மண்கட்டியை புரட்டிப் போட்ட எருதுகள் அங்கேயே நின்றுவிட்டன. நகர மறுத்து விட்டன.
உழவன் அந்தப் பெரிய மண்கட்டியில் நற்கருணைப் பாத்திரம் புதைந்து இருப்பதைக் கண்டு எடுத்து, திறந்து பார்த்தபோது அதில் ஒரு நற்கருணை மட்டும் அழியாமல் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியுற்றான்.
இந்தச் செய்தி காட்டுத்தீ போல் ஊரெங்கும் பரவியது.
உடனே தொலேரே மியாஸ்தோ (DOLERO MIASTO) ஆலய பொறுப்பாளர்கள் வந்து, ஆடம்பர பவனியாக நற்கருணையை எடுத்துச் சென்றனர்.
அந்த இடத்தில் "இயேசுவின் திருஉடல்" என்ற பெரிய ஆலயம் கட்டப்பட்டது.
ஜூலை 24, 1726இல் இந்த ஆலயம் பெரிதாக விரிவாக்கப்பட்டு ஆயர் கிறிசிஸ்டோவ் போத்தோசியால் (Krzysztof Potochi) புதுப்பிக்கப்பட்டு, அர்ச்சிக்கப்பட்டது.
1290லிருந்து அழியா நற்கருணையை வணங்குவதற்கு ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் பல்வேறு நாடுகளிலிருந்து வருகின்றனர்.