புனித தாமஸ் அக்வீனாஸ் 1225 - 1274 (திருநாள் ஜனவரி 28 - துறவி மறைவல்லுநர்)
இவரே கத்தோலிக்க திருச்சபையின் மறைவல்லுநர், 1200 -ல் குருக்கள் தினமும் திருப்பலி நிறைவேற்றும் வழக்கமில்லை. ஆனால் புனித தாமஸ் மிகக்கடினமான வியாதியின் காரணத்தால் காரணத்தால் முடியாமல் போனாலன்றி தினமும் திருப்பலி நிறைவேற்றுவார். மேலும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவே துறவிகள் செய்யும் திருப்பலியில் பங்கேற்பார்.
திருப்பலி நிறைவேற்றும் போது அவர் அடிக்கடி கண்ணீர் விடுவார். ஒரு முறை அவர் திருப்பலி நிறைவேற்றிய பொழுது பரவசமாக்கிவிட்டார். அங்கு இருந்தவர்கள் அவரிடம் போய் அவரை அசைத்து உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்ட பொழுது அதை என் நாவினால் விளக்க முடியாது" என்றார். புனித பெர்னார்டு எழுதிய கவிதை ஒன்று பரவச நிலையை விளக்குகிறது. "இயேசுவின் அன்பை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அது புரியும். அதைப்பற்றி பேசவோ, எழுதவோ முடியாது". நற்கருணையைப் பற்றி அவர் எழுதிய கோட்பாடுகளையும், படிப்பினைகளையும் கத்தோலிக்கத் திருச்சபை முழுமையாக ஏற்றுக்கொண்டது. தப்பிறைகள் தலைதூக்கிய போதெல்லாம் அவைகளை மறுத்து உண்மையை நிலைநாட்ட பல திருச்சங்கங்கள் புனித தாமஸ் சொன்ன கருத்துக்களைப் பயன்படுத்தியது குறிபிடப்பட்டது. ஆண்டவரின் திருவுடல், திருஇரத்தத்தின் திரு நாள் கட்டளை ஜெபத்தையும், திருப்பலி பூசை ஜெபங்களையும் எழுதிய புனித தோமஸ்தான் நற்கருணை ஆராதனையின் போது லத்தீன் மொழியில் உலகெங்கும் பாடி வந்த "Tantum ergo" என்ற பாடல் அவர் இயற்றியதே! நற்கருணை வாங்கிய பிறகு சொல்லி வந்த நன்றியறிதல் ஜெபம் மிகவும் புகழ் பெற்றது. 'ஓ இனிய இயேசுவே, உம்முடைய திருவுடலும், திருஇரத்தமும் என் ஆன்மாவிற்கு இனிமையும், ஒளியும் தருவதாக! எனக்கு சோதனைகள் வரும் போதெல்லாம் என் மீட்புமும், தூய்மையுமாய் இருப்பதாக! துன்ப வேளையில் எனக்கு மகிழ்ச்சியும் அமைதியும் கொடுப்பதாக. நான் சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒளியும்; நான் செய்யும் செயலுக்கும் ஆற்றலும் என் மரண வேளையில் உறுதியான ஆற்றலும் தருவதாக!" ஆமென்.