1916ஆம் ஆண்டில் 8 வயது பிரான்சிஸ்கோவும், 6 வயது ஜெசிந்தாவும், 14 வயது லூசியாவுடன் சேர்ந்து, பாத்திமாவில் ஆடுகளை மேய்த்து வந்தனர்.
வானதூதர் இடது கையில் பூசை பாத்திரத்தையும் வலது கையில் நற்கருணையும் அதிலிருந்து இரத்தம் சொட்டுவதையும் கண்டனர்.
அவர்கள் மூவரும் முழங்கால் படியிட்டு கீழ்க்கண்ட ஜெபத்தை ஜெபிக்கச் சொன்னார்.
“பிதா, சுதன் பரிசுத்த ஆவியாகிய மிக பரிசுத்த தமத்திருத்துமே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம்.
உலகின் பாவங்களுக்காகவும், நிந்தை அவமானங்களுக்காகவும் பரிகாரமாக, மிக பரிசுத்த இயேசுவின் திருவுடல், திருஇரத்தம், அவர் ஆன்மா, தெய்வீகத்தையும், உலகில் உள்ள நற்கருணைப் பேழையில் இருக்கும் இயேசுவின் பாடுகளையும், மரியாயின் மாசற்ற திரு இருதயத்தின் வழியாக பாவிகள் மனம் திரும்ப வேண்டுமென்று ஒப்புக் கொடுக்கிறோம்''.
மூன்று முறை ஆராதனை செய்த பிறகு லூசியாவுக்கு நற்கருணையையும், பிரான்சிஸ்கோ, ஜெசிந்தாவுக்கு கிண்ணத்தில் பருகும்படியும் கொடுத்தார்.
"உலகில் நன்றி கெட்ட மனிதர் செய்யும் அக்கிரமங்களுக்கு பரிகாரம் செய்து கடவுளுக்கு ஆறுதல் கொடுங்கள்' என்று கூறி விட்டு, மீண்டும் தரையில் விழுந்து ஆராதனை செய்து மும்முறை அதே மன்றாட்டை சொன்ன பிறகு மறைந்து போனார்.