ஸ்பெயின் நாட்டில், குவாதலூப்பே என்ற ஊரில், "நம் ஆண்டவர்" ஆலயத்தில் நாம் இன்றும் காணக்கூடிய புனிதப் பண்டங்கள் உள்ளன (Guadalupe, Spain).
ஒன்று திருஇரத்தக்கறை படிந்த துகில் (Corporal) மற்றது திருஇரத்தக்கறை படிந்த Pall எனப்படும் பாத்திர மூடி.
1420 ஆம் ஆண்டு நம் ஆண்டவர் ஆலயத்தில் டான்பேதுரு காபநூலாய் என்ற மிக பக்தியுள்ள குரு திருப்பலியின்போது நற்கருணையை உயர்த்தி காட்டும் போது, திருஇரத்தம் அதிலிருந்து வழிந்து, திருப்பலிப் பாத்திரத்தை நிரப்பி, பீடத்தில் உள்ள துகிலின் மேலும், பாத்திர மூடியிலும் வழிந்தோடியது.
அப்போது ஒரு குரலைக் குரு கேட்டார். "இப்போது திருப்பலியை முடித்து விடு. இதைப் பற்றி யாரிடமும் சொல்லாதே!"
டான்பேதுரு காபநூலாஸ் தன் திருப்பலியை முடித்து விட்டார்.
அதைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை.
டான்பேதுருவின் சகோதரர்கள் இந்த நிகழ்வை வெளியிட்டனர்.
ஸ்பெயின் நாடு முழுவதும் இந்தச் செய்தி பரவியது.
2 ஆம் டான் ஜுவான் என்ற காஸ்டீல் அரசனுக்கும், அரசி மரியா (அரகோன்)க்கும் இச்செய்தி எட்டியது.
டான்பேதுரு காபநூலாஸ் நற்கருணையின் மேல் மிக பக்தி கொண்டிருந்தார்.
இரவும், பகலும் நற்கருணை ஆராதனை செய்வார்.
ஆகவே அரசியும், அரசனும் மரித்த பிறகு குரு டான்பேதுரு நூல்லாசின் கல்லறைக்கு அருகிலேயே புதைக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.
1926ல் தொலீதோ (Toledo) வில் திவ்யநற்கருணை மாநாட்டில் இந்த திருப்பண்டங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.