"To live and share Christ"
BISHOP THOMAS AQUINAS
Bishop of Coimbatore
Bishop's House, Post Bag No.6 Big Bazaar Street,
Coimbatore-1 Tamilnadu, South India.
Tel: 0422-2390430, 2382806
Fax : 0422-2394530
jam di Email: cbebishophouse@vsnl.com
Website: www.coimbatorediocese.com
'நற்கருணை புதுமைகள்" எனும் தலைப்பில் திருச்சபையின் காலச் சக்கரத்தில் நற்கருணை வழியாக நடைபெற்ற புதுமைகளை வரலாற்றுக் கண்ணோடு திருச்சபையின் பார்வையில் நற்கருணை மீது நமது நம்பிக்கை ஊன்றியிருக்க வேண்டும் என்ற நோக்குடன் கப்புச்சின் சபை அருள்தந்தை ஜோனத்தன் நிரல்படுத்தியுள்ளார். புனித பவுலடிகளார் தனது திருமடல்களில் நற்செய்தியின் பகுதிகளை மீண்டும் திருப்பி எழுதவேயில்லை ஒன்றே ஒன்றை தவிர. நற்செய்தியில் காணும் ஒரே ஒரு பகுதியை மட்டும் பவுலடிகளார் தனது மடலில் திரும்பவும் பதிவு செய்கிறார் என்றால் அது இயேசுவின் இறுதி உணவாம் நற்கருணை நிகழ்வு மட்டுமே இந்த ஒன்றே நற்கருணை ஆதித்திருச்சபையின் காலம் முதல் எப்படிப்பட்ட முக்கியமான பங்கு வகிக்கிறது என்பதை நாம் தெளிவாக கண்டு கொள்ளலாம்.
நற்கருணை இறை மறைபொருள் என்பது நாம் அறிந்தது. உலகளாவிய கத்தோலிக்கத் திருச்சபையில் காணப்படும் மற்றொரு அதிசயம் என்னவெனில் ஒவ்வொரு மணி நேரத்திலும் உலகத்தில் ஏதாவது ஒரு பகுதியில் இயேசுவின் நற்கருணைப்பலி நிறைவேற்றப்பட்டுக் கொண்டேயிருக்கும். அதாவது இருபத்திநான்கு மணி நேரமும் இடைவிடாது கத்தோலிக்கத் திருச்சபையில் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிதென்றால் அது நற்கருணைப் பலி என்றால் மிகையாகாது. ஆக நற்கருணை எனும் சக்கரச் சுழற்சியில் திருச்சபை நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. நற்கருணையின் சிறப்பம்சம் என்னவெனில் நாம் எதை உணர்கிறோமோ அதுவாகவே மாறுகிறோம். மற்ற உணவை உண்ணும்போது அது நம் உடலாக மாறுகிறது. ஆனால் கிறிஸ்துவின் திருவுணவை நாம் உட்கொள்கின்ற போது நாம் கிறிஸ்துவின் உடலாக மாறுகிறோம் என்பது தான் மற்ற உணவிற்கும் இயேசுவின் திருவுணவிற்கும் உள்ள வேறுபாடு. நற்கருணையை உட்கொள்வதன் வழி ஒவ்வொரு கிறிஸ்தவனும் இயேசுவைத் தான் வாழும் சமூகத்திற்கு, தான் பணி செய்யும் பணித்தளத்திற்கு, தன் இல்லத்திற்கு இயேசுவை தாங்கிச் செல்லும் திருப்பேழையாக மாறுகிறான். இவ்வாறு நற்கருணை மைய வாழ்வாக நம் வாழ்வு அமைய வேண்டும். ooo tor திருச்சபையின் துவக்க காலத்திலிருந்தே கிறிஸ்துவின் சீடர்கள் ஓய்வு நாள்தோறும் திருச்சபையாக ஒன்றுகூடி வந்தார்கள். அவர்கள் இறைவார்த்தை பகிர்விலும் நற்கருணைப் பகிர்விலும் பங்கெடுத்தார்கள் என்று அறிய வருகிறோம். "அவர்கள் திருத்தூதர் கற்பித்தவற்றிலும், நட்புறவிலும், அப்பம் பிடுவதிலும், இறை வேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள் (தி.ப.2.42). எம்மாவுஸ் நிகழ்விலும் இயேசு அப்பத்தைப்பிட்கையில் சீடர்கள் உயிர்த்த ஆண்டவரைக் கண்டு கொண்டார்கள் என்று புனித லூக்காஸ் தன்னுடைய நற்செய்தியில் பதிவு செய்வதன் வழியாக நற்கருணை உயிர்த்த ஆண்டவருடைய உன்னத பிரசன்னமாக உள்ளது என்பதை ஒவ்வொரு கிறிஸ்தவ விசவாசியும் அறிந்து அனுபவித்து ஏற்றுக்கொள்ள கடமைப்பட்டுள்ளனர். நற்கருணை புதுமைகள் எனும் இந்நூல் மறைக்கல்வி ஆண்டில் வெளிவருவது சிறப்புக்குரியது. கத்தோலிக்கத் திருச்சபையின் மறையுண்மைகளில் ஊன்றிய விசுவாசத்தைப் பார்க்க இந்நூல் பெரிதும் துணை புரியும் என நம்புகிறேன்.
நற்கருணையை நம் வாழ்வின் மையமாக்கிக் கொண்டு விசுவாசப் பயணத்தைத் தொடர உங்கள் கையில் தவழும் இப்புத்தகம் சிறந்ததோர் உதவியாக இருக்கும் என்பது என் உளமார்ந்த நம்பிக்கை. தமிழகத் திருச்சபை நற்கருணைப் பக்தியை வளர்க்கும் முயற்சிக்கு அருட்தந்தை ஜோனத்தன் க.ச. அவர்கள் எழுதிய இப்புத்தகம் தமிழக மக்களுக்குக் கிடைத்த பரிசு என்றே சொல்லலாம். ஒவ்வொருவர் இல்லத்திலும் இப்புத்தகம் இருந்து படிக்கின்ற அனைவருக்கும் நற்கருணை ஆண்டவரின் அருளைக் கொணர செபம் கலந்த வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
கிறிஸ்துவில் அன்புள்ள
லே. தாமஸ் அக்குவினாஸ்
கோவை ஆயர்