வசுலா ரிடன்
இவர் திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகளுக்குத் தாயானவள். கிறீக் ஆர்தடாக்ஸ் சபையைச் சார்ந்தவள். 30 ஆண்டுகளாய் கோயிலுக்கு போகாதவள். கடவுளை வழிபடாதவள். பங்களாதேசத்தின் புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை 1985 ஆம் ஆண்டு இயேசு அவளுக்கு நேரடியாக காட்சி அளித்து 4 ஆண்டுகளாக,"மனமாறுங்கள், ஒப்புரவாகுங்கள், அமைதிக்காகவும், ஒற்றுமையாகவும் பாடுபடுங்கள்"என்ற செய்தியை உலகிற்கு அளித்துள்ளார். இந்தச் செய்திகள் 40 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலகெங்கும் அறிவிக்கப்பட்டு வருகிறது. வசுலா 60 க்கும் மேலான நாடுகளில் 800 க்கும் மேலான இடங்களில் நற்செய்தி அறிவித்துள்ளார்". 1994 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலும். ரொமானியன் கிறீக் ஆர்தடாக்ஸ் பிதாபிதா, தியோடிஸ்டும் திருச்சபை ஒன்றிப்புக்காக ஒரே கோயிலில் வழிபாடு நடத்தினார்கள். அகில உலக கிறிஸ்தவ சபைகள் ஒன்றியம் கிறிஸ்து உயிர்ப்புத் திருநாளை அனைவரும் ஒரே நாளில் கொண்டாட வேண்டும் என்று உறுதி செய்தது.
"இறைவனில் உண்மையான வாழ்வு (True Life in God) என்ற வசுலாவின் செய்தியைத் திருத்தந்தை 16 ஆம் பெனடிக் மாரநைட் பிதாபிதா, கர்தினால் சுவியர், கர்தினால் தோப்போ, பேராயர் வின்சென்ட் கொன்செஸ்சோ, டெல்லி பேராயர் செராபின், டெல்லி ஆயர் அனில் கூட்டே, ஆயர் ஜெராமியா, யுக்ரேனிய அர்தடாக்ஸ் பிதாபிதா. ஆயர் அபு எல் அஸ்னாய், ஜெருசலேம் ஆங்லிக்கன் திருச்சபை, லூதரன் ஆயர் கார்ல் சிகுபோர்சன் போன்ற அனைத்துத் திருச்சபை தலைவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இயேசுவின் வேண்டுகோள்களின்படி எப்போதும் அனைத்துத் ன் திருச்சபையும் ஒன்றிணைந்து நற்கருணை பலியில் கொள்கிறார்களோ அன்றே ஒரே மந்தையும், ஒரே ஆயரும் என்ற நிலை ஏற்படும். இயேசுவின் மன்றாட்டு நிறைவேறும் (யோ.10:16) நாள் நெருங்கிவிட்டது!