மே 10. 1718இல் அருட்தந்தை பிரான்சஸ்கோ ஸ்கோதா, திருப்பலி நிறைவேற்ற ஓபராமெல்லிய வாக்கா என்ற கோயிலுக்குச் சென்றார் (Asti, Italy).
அங்கு ஆயரின் பிரதிநிதியான சிபியோனே அலக்சாந்தோ அம்ரோஜியோவும் திருப்பலிக்கு உதவி செய்ய ஒரு சிறுவனும் மட்டும் இருந்தனர்.
குரு வசீகரம் செய்யப்பட்ட நற்கருணையை உயர்த்திப் பிடித்தபோது, அது இரண்டு துண்டாகக் காணப்பட்டது.
இரண்டு துண்டுகளிலிருந்தும் திருஇரத்தம் சொட்ட ஆரம்பித்தது.
குரு பாத்திரத்தை உயர்த்திப் பிடித்தபோது, பூசைப் பாத்திரத்தின் அடிப்பாகத்திலும், திருப்பலிப் பீடத்திலும் திருஇரத்தத் துளிகள் சிந்தியிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.
உடனே பல குருக்களும், அர்ஜன்தா, ஓல்பினி, வெர்சலோனே என்ற மூன்று மறைவல்லுநர்களும் அங்கு வந்து, திருஇரத்தம் உண்மையான புதுமை என்று வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
இந்தப் புதுமையான திருப்பண்டத்தை 280 ஆண்டுகள் கழித்தும் இன்றும் அஸ்தியில் காணலாம்.