ஃவேவர்னே 1608

17 ஆம் நூற்றாண்டில் புராடஸ்டான்ட் சபையும், கால்வின் சபையும் பிரான்ஸ் நாட்டில் மிகத் தீவிரமாகப் பரவி கத்தோலிக்க விசுவாசத்தைச் சிதறடித்து வந்தது. 

ஃவேவர்னே என்ற ஊரில் ஆசீர்வாதப்பர் சபை மடம் இருந்தது (Faverney, France). 

1608 ஆம் ஆண்டு பெந்தகோஸ்து திருநாளுக்கு முன் தினம் திவ்ய நற்கருணை ஸ்தாபகம் செய்து, மாலை வழிபாடு செய்த பிறகு துறவிகள் இரவு படுக்கைக்குச் சென்றுவிட்டனர். 

அன்று இரவு நற்கருணை ஸ்தாபகம் செய்திருந்த பலிபீடத்தில் நெருப்பு பிடித்து எல்லாம் சாம்பலானது. 

மறுநாள் அதிகாலையில் சக்ரீஸ்தன் கோயிலைத் திறந்த போது ஒரே புகை மண்டலமாயிருந்ததைக் கண்டு அலறி அடித்துக் கொண்டு மடத்திற்குள் சென்று அறிவித்தான். 

உடனே துறவிகள் ஓடி வந்து, பீடத்தைப் பார்க்கும் போது, என்ன ஆச்சரியம் எல்லாம் சாம்பலாயி விட்டாலும், நற்கருணைக் கதிர்பாத்திரம் மட்டும் அழியாமல், நற்கருணையும் எரிந்து போகாமல் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.