ஒரு ஜெர்மானிய குரு திருப்பயணமாக உரோமைக்குச் செல்லும்போது, இத்தாலியில் உள்ள பொல்சேனா என்ற ஊரில் தங்கினார் (Bolsena, Italy).
அவர் பக்தியுள்ள குருவாக இருந்தாலும், நற்கருணை யில் இயேசுவின் உண்மையான பிரசன்னத்தை ஏற்றுக் கொள்ளத் தயங்கினார்.
புனித கிறிஸ்தீனா பலிபீடத்தில் திருப்பலி நிறை வேற்றிய போது, வசீகர வார்த்தையை உச்சரித்ததும், நற்கருணை யிலிருந்து திருஇரத்தம் வழிந்து அவர் கரங்களிலும், பீடத்துணி விரிப்பின் மீதும் சிந்தியது.
அதிர்ச்சியுற்ற குரு. ஓர்வியட்தோ என்ற ஊரில் தங்கியிருக்கும் திருத்தந்தை 4 ஆம் உர்பனுக்குத் தகவல் அனுப்பினார்.
திருத்தந்தையும் உடனே. தனது பிரதிநிதிகளை அனுப்பி புதுமை நடந்ததை உறுதிச் செய்தார்.
பின்பு ஆயரை அங்கு அனுப்பி, திருஇரத்தம் தோய்ந்த புனிதத் துணியை (Corporal) கொண்டு வரும்படி பணித்தார்.
அந்தப் புனிதத் துணியை மறைமாவட்ட பேராலயத்தில் அனைவரும் பார்க்கும்படி வைத்தார்.
திருத்தந்தை நான்காம் உர்பன், புனித தாமஸ் அக்வீனாசை, நற்கருணைப் பற்றிய புதிய பாடலை இயற்றச் சொன்னார்.
இதுவே உலகமெங்கும், இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு முன்பு பாடப்பட்டு வந்த Tantum Ergo என்ற இலத்தீன் பாடல் திருத்தந்தை 4ம் உர்பன் ஆகஸ்ட் 1264ல்"கிறிஸ்துவின் திருஉடல், திரு இரத்தம்" என்ற பெருவிழாவை கொண்டாடும்படி கட்டளை இட்டார்.