அருட்தந்தை லாசரோ தா வெரோனா (Fr. Lazzaro da verona), புனித மரியாள் பேராலயத்தில் 1412 இல் திருப்பலி நிறைவேற்றினார் (Bagno di Romagna).
நற்கருணையில் இயேசு உண்மையாகிலும் பிரசன்னமாயிருக்கிறாரா? என்ற சந்தேகம் அவரை அடிக்கடி அலைக்கழித்தது.
திராட்சை இரசத்தை வசீகரம் செய்த உடனே, அது திருஇரத்தமாக மாறி, பாத்திரத்திலிருந்து வழிந்து பீடத்தில் சிந்தியது.
குருவானவர் மிகவும் அதிர்ச்சியுற்று, மனம் வருந்தி மக்களிடம் பாவமன்னிப்புக் கேட்டார்.
இந்த இரத்தம் தோய்ந்த புனிதத் துணி (Corporal) புனித மரியாளின் பாக்னோதிரொமாஞ்ஞா என்ற பேராலயத்தில் இன்றும் மக்கள் வணக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது.
1912 இல் புதுமை நடந்த 5 ஆம் நூற்றாண்டு விழாவை, கர்தினால் கிள்ளியோ போஸ்கி தலைமையில் கொண்டாடினார். 1958 இல் பேராயர் தொமனிகோ போர்னிஜியா உத்தரவின் பேரில் பிளாரன்ஸ் பல்கலைக்கழகம் ஓர் விஞ்ஞான ஆராய்ச்சி செய்தது.
இந்தப் புதுமை உண்மை என்று அறுதியிட்டுக் கூறியது.
ஆண்டுதோறும் திவ்யநற்கருணைத் திருவிழா அன்று இந்தப் புனிதத் துணி மிகவும் ஆடம்பரமான பவனியாக எடுத்துச் செல்லப்படுகிறது.