தூய ஆவியாரும், மனுவுருவும்

தந்தை தன் மகனை இவ்வுலக மீட்பின் பணியைச் செய்து முடிக்க அனுப்பியது போல் தூய ஆவியாரையும் அனுப்பினார். மீட்பின் மறைபொருளில் இருவருக்கும் பங்கு உண்டு கன்னியாகிய மரியாளுக்குக் கபிரியேல் வானதூதர் கொடுத்த வாக்குறுதி. 

"தூய ஆவியார் உம்மீது வருவார் உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும் ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது அக்குழந்தை இறைமகன் எனப்படும்" (லூக். 1:35) 

எனவே வானகத் தந்தை தன் மகனை இவ்வுலகிற்கு அனுப்பியது தூய ஆவியார் வழியாகவே. மரியாள் கருத்தரித்தது தூய ஆவியாரின் வல்லமையால். 

ஆகவே மரியாள் பெற்றெடுத்த குழந்தை தூய இறைமகன் இயேசுவே ஆகும். 

தூய ஆவியார் இன்றி இயேசு மனித அவதாரம் இல்லை. 

இயேசு இன்றி மீட்பு இல்லை. 

மரியாள் இன்றி மீட்பரும் மீட்பரும் இல்லை. 

வானகத் வானகத் தந்தையின்றி இயேசுவுமில்லை தூய ஆவியாருமில்லை!