காசியா இத்தாலி 1330

காசியா என்ற கிராமத்தில் ஓர் ஏழை உழவன், நற்கருணை வாங்கவேண்டும் என்று தன் ஆவலை குருவிடம் சொன்னான் (Casia Italy). 

குரு வழக்கம் போல் நற்கருணையைச் சிமிழில் எடுத்துச் செல்லாமல், தன் கட்டளை ஜெப புத்தகத்தில் வைத்துச் சென்றார். 

கிராமத்தை அடைந்ததும் நோயாளிக்கு நற்கருணை வழங்க, தன் கட்டளை ஜெபபுத்தகத்தை விரித்துப் பார்த்த போது, என்ன ஆச்சரியம், நற்கருணைக்குப் பதிலாக, இரத்தம் கட்டிப்போய் ஜெபபுத்தகத்தில் ஒட்டிக் கொண்டது. 

அதிர்ச்சி அடைந்த குரு, சியன்னாவில் உள்ள அருட்தந்தை சீமோனே பிதாத்தி, என்ற பக்தியுள்ள குருவிடம் பாவ மன்னிப்புப் பெற்று, ஆலோசனை கேட்டார். 

குருவுக்குப் பாவமன்னிப்பு அளித்த அருட்தந்தை சிமோனே பிதாத்தி அந்த இரத்தக்கறை படிந்த ஜெபபுத்தகத்தின் பாகத்தைப் புனிதமாக வைக்கச் சொன்னார். 

புனித அகுஸ்தினார் மடத்தில் 1687 முதல் கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தம் திருநாள் அன்று திருப்பண்டம் ஆடம்பர பவனியாக கொண்டு செல்லப்படுகிறது.