புனித அசிசி பிரான்சிஸ் (திருநாள் அக்டோபர் 4) (St. Francis of Assisi) 1181-1226
நீங்கள் கிறிதுமஸ் குடிலைப் பார்த்திருப்பீர்கள். முதல் முதலாக இத்தாலி நாட்டில் கிரேச்சியோ என்ற ஊரில் புனித பிரான்சிஸ் ஒர் உயிருள்ள குடிலை ஏற்பாடு செய்தார். அங்கு ஆடு, மாடு, வைக்கோல் எல்லாம் வைத்தார்கள். துறவிகள் தியாக்கோனாயிருந்த பிரான்சிஸ் அங்கு கிறிஸ்துமஸ் செய்ய ஏற்பாடு செய்தார். திருப்பலியின் போது தியாக்கோன் பிரான்சிஸ் இயேசுவுடைய ஏழ்மையைப் பற்றி பிரசங்கம் வைத்தார். குரு வசீகரம் செய்யப்பட்ட அப்பத்தை எடுத்து உயர்த்திக் காட்டும் போது அங்குக் குழந்தை இயேசு காட்சி அளித்தார். எல்லாரும் ஆச்சரியத்துடன் மண்டியிட்டு ஆராதித்தனர். அன்று முதல் அவர் கற்றுத்தந்த ஜெபத்தை எல்லாரும் சொல்லி வருகின்றனர். 'ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே! உம்மை இங்கும் உலகில் உள்ள எல்லா தேவாலயங்களிலும் ஆராதித்து வணங்கி நன்றி கூறுகிறோம் . ஏனெனில், நீர் சிலுவை மரணத்தால் எங்களை மீட்டு இரட்சித்தீர்.
அசிசி பிரான்சிஸ் பீட்டர் பெர்னிடோன், பிகாவுக்கு அருமை மகனாய் பிறந்தவர். அவர் தந்தை அசிசியில் பெரிய ஜவுளிக் கடை வைத்திருந்தார். பிரான்சிஸ் ஒரு போர் வீரனாக மாற வேண்டும். புகழ் பெற வேண்டும் என்று அசிசி நகருக்கு போர்ஜியாவுக்கு இடையில் நடந்த போரில் கலந்து கொண்டார். தோல்வியுற்று சிறையில் அடைக்கப்பட்டார். அன்று இரவு ஒரு குரல் கேட்டது, "பிரான்சிஸ் யாருக்கு ஊழியம் செய்வது மேல் எஜமானுக்கா, பணியாளனுக்கா? உடனே பிரான்சிஸ் "எஜமானுக்கே" என்றார். அவர் எழுந்து புறப்பட்டு போய் தந்தையின் கடையில் உள்ள துணி மணிகளை ஏழைகளுக்கு கொடுத்து விட்டு டாமியன் என்ற பாழ் அடைந்த கோயிலுக்குத் தனியாகத் தியானம் செய்தார். பிரான்சிஸ் என் கோயிலைப் பழுது முது பார்" என்ற குரல் அங்கிருந்த சிலுவையிலிருந்து வந்தது. உடனே பிரான்சிஸ் கோயிலை புதுப்பித்தார். கோயிலை கூட்டி பெருக்கி துப்புரவு செய்தார். பீடத்துணிகளைத் துவைத்து, தூய்மைப்படுத்தினார். திருப்பலிக்குத் தேவையான பூசை பாத்திரம், பூசை உடுப்பு யாவற்றையும் மக்களிடம் சென்று வாங்கி திருப்பலி நடக்க ஏற்பாடு செய்தார். தான் குருவாக ஆக எந்த தகுதியும் இல்லை என்று ஒரு தியாக்கோனாகவே ஊழியம் புரிந்தார்.
பிரான்சிஸ் நற்கருணைமேல் அளவு கடந்த பக்தி, பற்றுதல் கொண்டிருந்தார். அடிக்கடித் திருப்பலியில் பங்கு கொண்டு, நற்கருணை வாங்குவார். குருக்களை நாம் மதிக்க வேண்டும். ஏனெனில் அவருடைய அபிஷேகம் செய்யப்பட்ட கரங்களில் தான் இயேசு இறங்கி வருகிறார் "நான் ஒரு சம்மனசையும், ஒரு குருவானவரையும் சந்திக்க நேர்ந்தால் முதலில் குருவானவருக்கே வணக்கம் செய்து அவருடைய அர்சிக்கப்பட்ட கரங்களை முத்தி செய்வேன்" என்பார். "கடவுளின் தாழ்ச்சியைப் பாருங்கள். சகோதரரே ஓ தாழ்ச்சிக்குரிய மகத்துவமே நம் மீட்புக்காக அகிலத்தின் ஆண்டவரும், "கடவுளின் மகனும் தம்மைப்போல் தாழ்த்திச் சிறு அப்பத்திலே தம்மையே மறைத்துக் கொள்கிறார். தூயத் திருத்தூதர்களுக்கு மெய்யான மனித உருவிலே தோன்றிய அவர் நமக்குத் தூய அப்பத்தின் உருவிலே தம்மையே வெளிப்படுத்துகிறார். உலகம் முடியும் வரை நம்மோடு இருக்கிறார்" (மத்.28:20). இயேசுவின் ஐந்து காயங்கள் வரம் பெற்ற முதல் புனிதர் இத்தாலி நாட்டிற்கு பாதுகாவலர் பிரான்சிஸ்கன் சபையை ஆண்களுக்கும், பெண்களுக்கும், பொதுநிலையினருக்கும் நிறுவியவர்.