துமாகோ என்பது ஒரு சிறு தீவு கொலம்பியாவில் உள்ளது (Tumaco, Columbia).
ஜனவரி 31, 1906இல் துமாகோ தீவை பூமி அதிர்ச்சி காலை 10 மணிக்குச் சுமார் 10 நிமிடம் உலுக்கியது.
கதிகலங்கிய மக்கள் பங்குக் கோயிலுக்கு ஓடி வந்து பங்குக் குரு ஜெரால்டோ லொரஸ்டோவை நற்கருணைப் பவனியை உடனடியாக தொடங்கும் படி வற்புறுத்தினர்.
கடலானது பொங்கி கடலோரத்தில் ஒரு கிலோ மீட்டர் கடற்கரையை ஆக்கிரமத்து விட்டது.
ஆழிப் பேரலையானது சுவர்போல் எழும்பி தீவில் வசிக்கும் எல்லோரையும் அழித்து விடும் போல் யாவரையும் அச்சுறுத்தியது.
பங்குத்தந்தை ஜெரால்டோ, நற்கருணை ஒன்றை அருந்தி விட்டு, கதிர்பாத்திரத்தில் பெரிய நற்கருணையை வைத்து, "வாருங்கள் மக்களே நாம் அனைவரும் கடற்கரைக்குச் செல்வோம்.
நற்கருணை நாதர் நம்மை காப்பாற்றும்படி இறைஞ்சுவோம் என்றார்.
நற்கருணை நாதர், “நான் உங்களோடு இருக்கிறேன்" என்று சொன்னவர் நம்மோடு இருக்க நாம் ஏன் பயப்பட வேண்டும் என்ற விசுவாசத்தோடு, கடற்கரைக்கு விரைந்துச் சென்றனர்.
பங்கு குரு ஜெரால்டோ கடற்கரைக்குச் சென்று, இராட்சத அலை மேல் திருச்சிலுவை அடையாளத்தைப் போட்டதும், பாய்ந்து வந்த இராட்சத அலை அமைதியாகிக், கடலுக்குள் சென்றது.
"புதுமை புதுமை என்று மக்கள் ஆர்ப்பரித்தனர்.
பங்குத்தந்தை ஜெரால்டோவும் அவரோடு சென்ற தந்தை ஜீலியனும், மக்களும் நற்கருணைநாதரைப் போற்றித் துதித்தனர்.
அன்று துமாகோ தீவை காத்து இரட்சித்த நற்கருணைக் நாதருக்கு நன்றிப் புகழ் பாடிக் கொண்டே பங்குக் கோயிலுக்குத் திரும்பி வந்தனர்.