இத்தாலி சலுசோ என்ற மாவட்டத்தில் திரோனேரோ (Dronero) என்ற ஊரில் ஆகஸ்ட் 5, 1631இல் தீ விபத்து ஏற்பட்டது.
ஓர் இளம் பெண் வைக்கோலில் தீயை மூட்டவே அது மிக விரைவாக, காற்று பலமாக வீசிய பகுதிகளில் பரவி ஒரு பணக்கார புர்கோ மரியா வீட்டைத் தாக்கியது.
மக்கள் திரண்டு வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
ஆனால் முடியவில்லை.
மொளரீஸ் டெ செவா என்ற கப்புச்சின் துறவி, நற்கருணை ஆண்டவர் மேல் பக்தி கொண்டவர்.
புனித பிரிஜிட் கோயிலுக்கு சென்று நற்கருணைக் கதிர்ப் பாத்திரத்தை ஆடம்பரமாக, மக்களை திரட்டிக் கொண்டு தீ பிடித்து எரியும் பகுதிக்குச் சென்றார்.
அவர் சென்ற உடனேயே தீ ஆச்சரியமாய் அணைந்து விட்டது.
இந்த நிகழ்வைப் புனித பிரிஜிட் கோயில் கல்வெட்டில் பதிந்திருப்பதை இன்றும் காணலாம்.
ஆண்டுதோறும் இயேசுவின் திருவுடல், திரு இரத்தம் திருநாளன்று, திரோனேரோ மக்கள் இந்தப் புதுமைக்காக நன்றி செலுத்தும் வகையில் நற்கருணைப் பவனியை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகின்றனர்.