1. பழைய பாஸ்காவின் செம்மறி மாசுமறுவற்றதாய் இருக்க வேண்டும்.(வி.ப.12:5)
புதிய பாஸ்காவாகிய இயேசு கிறிஸ்து மாசற்றவர். (மத். 27:19; லூக். 23:4; லூக் 23:22; யோவா. 18:38).
2.பழைய பாஸ்கா செம்மறியின் இரத்தத்தை வீட்டின் கதவு நிலைகளில் பூசப்பட வேண்டும். அப்போதுதான் யூதர்கள் மீட்பு பெறுவர்.(வி.ப. 12:23)
புதிய பாஸ்காவாகிய இயேசுவின் சதையை உண்டு என் இரத்தத்தை குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்ழெச் செய்வேன்" என்று இயேசு கூறுகிறார் (யோவா. 6:53-54)
3. பழைய பாஸ்காவின் பலியான ஆட்டிறைச்சியை விழா கொண்டாடுவோர் உண்ணவேண்டும் (வி.ப. 12:8) அங்ஙனமே திருப்பலிக்கு கூடி வரும் உலக மாந்தர் அனைவரும் புதிய பாஸ்காவான கிறிஸ்துவின் திருவுடலைத் தின்று இரத்தத்தை அருந்த வேண்டும் (யோவா. 6:53-54)
4. செம்மறியின் எலும்புகளில் ஒன்றும் முறிவுபடலாகாது என்பது பழைய உடன்படிக்கை (வி.ப. 12:5) அதேபோல் உலகின் பாவம் போக்கிய மாசற்ற செம்மறியாகிய இயேசுவின் எலும்புகளில் ஒன்றும் முறிவு படவில்லை என்பது வரலாற்று உண்மை (யோவா.19:36)
5. பழைய பாஸ்காப் பலியை உண்பவர்கள் நீண்ட பயணத்திற்கு ஆயத்தமாய் உள்ள நிலையில் விரைவாக உண்ணவேண்டும் (வி.ப.12:11) புதிய பாஸ்காவாகிய கிறிஸ்துவின் உடலை உண்பவர்களுக்கு துன்பங்கள் நிறைந்த இவ்வுலகமான எகிப்தை விட்டு விட்டு கடவுள் வாக்களித்த விண்ணக எருசலேமை நோக்கி விரைவாக பயணமாகும் நிலையில் உண்ண வேண்டும்.
6. பழைய பாஸ்காவின்போது ஆண்டவரின் தூதர் செம்மறி ஆட்டின் இரத்தம் பூசப்பட்டிருந்த வீடுகளைக் கடந்து சென்றபோது அங்குக் குடியிருந்த யூதர்கள் உயிரோடு தப்பினார்கள். மற்றவர்கள் கொல்லப்பட்டனர் (வி.ப. 12:13) அதே போல் புதிய பாஸ்காவாகிய கிறிஸ்துவின் இரத்தத்தை குடிப்பவர்கள் (நற்கருணை வழியாய்) நித்திய வாழ்வுக்குள் கடந்து செல்வர் (யோவா. 6:53-54)
7.பழைய பாஸ்கா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டும்.
புதிய பாஸ்கா அங்ஙனமே எப்பொழுதும் சிறப்பிக்கப்பட வேண்டும் என்று விரும்பிய இயேசு, இதை என் நினைவாகச் செய்யுங்கள் என்று சீடர்களுக்கு கட்டளையிட்டார்." (1 கொரி. 11:25)
எனவே திருப்பலி உலகெங்கும் இரவும் பகலும் தொடர்ந்து ஒப்புக் கொடுக்கப்படுகிறது. இயேசுவின் இறைப் பிரசன்னம் எந்நேரமும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
"இதோ உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என இயேசுவின் வாக்குறுதி நிறைவேறுகிறது (மத். 28:20).