புனித ஜான் நியுமன் 1811-1860
பொகிமியா நாட்டில் பிறந்த ஜான் நியூமன் குருமடத்தில் சேர்ந்து குருத்துவ படிப்பை முடித்தார். அவர் பல மொழிகளையும் கற்று மிகவும் அறிவாற்றல் உடையவராக விளங்கினார். அமெரிக்க ஐக்கிய நாட்டில் அநேக அகதிகள், குருக்களின்றி தவிப்பதாக அறிந்து, அமெரிக்கா சென்றார். 1836 கிகிஇல் நியூயார்க்கில் குருப்பட்டம் பெற்றார்.
நற்கருனை நாதர் மேல் மிகுந்த பக்தி கொண்டிருந்த புனிதர், எனக்கு ஒரே ஒரு ஆசை தான் இருக்கிறது . நற்கருணை நாதர் அருகிலேயே நான் இருக்க விரும்புகிறேன் . அன்புள்ள இயேசுவே எனக்கு எல்லாம் நீரே.
நற்கருணையில் உள்ள உம்மோடு நான் எப்பொழுதும் இருக்க பசியோ, தாகமோ, வெப்பமோ, குளிரோ எதுவானாலும் நான் உம் அன்பிற்காக சகித்துக் கொள்வேன்" என்று எழுதியுள்ளார். தனது பங்கின் மக்கள் நற்கருணை நாதரை எப்போதும் ஆராதிப்பதற்காக 40 மணி நேர தொடர் ஆராதனை ஆரம்பித்து வைத்தார். பிலடல்பியாவில் உள்ள சில எதிரிகள் இரண்டு ஆலயங்களை தீக்கிரையாக்கினர்.
ஆகவே, குருக்கள் ஆயரான நியுமனை அணுகி 40 மணி நேர ஆராதனையை நிறுத்திவிடும்படி ஆலோசனை கூறினர். இதைப் பற்றி ஆழ்ந்து, சிந்தித்து ஜெபித்துக் கொண்டிருந்த ஆயர் மேசை மீது இருந்த எல்லா காகிதங்களையும் சுட்டெரித்து விட்டது. ஆனால் என்ன ஆச்சர்யம்! ஆயர் நற்கருணையைப் பற்றி எழுதிய சுற்றுமடல் மட்டும் எரிந்து போகாமல் அப்படியே இருந்தது.
தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த ஆயர் மண்டியிட்டு நற்கருணை நாதர் தன் உயிரைக் காப்பாற்றியதற்காக நன்றி கூறினார். "எதற்கும் அஞ்சாதே!" என்ற குரலைக் கேட்ட ஆயர் உடனே 40 மணி நேரத் தொடர் ஆராதனையைத் தன் மறைமாவட்டம் முழுவதும் தொடர வேண்டும் என்று சுற்றறிக்கை விட்டார். ஐக்கிய அமெரிக்கா முழுவதும் 40 மணி தொடர் ஆராதனை பரவியது.