பழைய புதிய உடன் படிக்கைகள்

1. பழைய பாஸ்காவின் செம்மறியின் இறைச்சிக்கோ இரத்தத்திற்கோ தன்னிலையே பாவத்தை போக்கும் எவ்வித சக்தியுமில்லை. அது புதிய பாஸ்காவாகிய இயேசுவின் திருவுடலுக்கும், திரு இரத்தத்திற்கும் நற்கருணை தெய்வீகத் தன்மை இணைந்திருந்தது. ஏனெனில் அது மனுவுருவான இறைவனின் திருவுடல், திருஇரத்தம், நற்கருணை விருந்தை நாம் உண்ணும் போது அந்த தெய்வீகத்தையே நமதாக்கிக் கொள்கிறோம். "எனது சதை உண்மையான உணவு, எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இனைந்திருப்பர். நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். வாழும் தந்தை என்னை அனுப்பினார் நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர். விண்ணிலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே. இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல அதை உண்டவர்கள் இறந்தார்கள் இவ்வுணவை உண்போர் என்றென்றும் வாழ்வர் என்றார் இயேசு" (யோவா. 6:55-58)

2. எப்போதெல்லாம் இறைவனுக்கு, இஸ்ராயேலருக்கும் இடையே உடன்படிக்கை நிகழ்ந்ததோ அப்போதெல்லாம் விருந்து கொண்டாடப்பட்டது (வி.ப.27:7-11) புதிய ஏற்பாட்டில் இயேசுவுக்கும் உலக மாந்தர் அனைவருக்கும் புதியதொரு நட்பின் உடன்படிக்கை செய்து கொள்ளப்படுகிறது. இயேசு இராவுணவின்போது அப்பத்தைக் கையில் எடுத்து இறைபுகழ் கூறி, இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல் என் நினைவாகச் செய்யுங்கள். பின் கிண்ணத்தை எடுத்து இந்த கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைபடுத்தப்படும் புதிய உடன்படிக்கை" என்றார் (லூக். : 22:19- 20) புதிய ஏற்பாட்டில் இயேசு தன் உடலையும், தன் இரத்தத்தையும் உணவாகவும் பானமாகவும் நற்கருணையில் விருந்தாகப் பரிமாறுகிறார். இது கடவுளுக்கும், மனிதருக்கும் உள்ள உடன்படிக்கை மட்டுமல்ல இறைவனையே நமக்கு உணவாக கொடுக்கும் அருட்சாதனம்.

3. கல்வாரியில் நிகழப்போகும் உலக மீட்புச் செயலின் வல்லமை எல்லாம் இந்த புதிய உடன்படிக்கைப் பலியும் விருந்துமாகிய நற்கருணையில் நிறைவேற வேண்டும் என்று இயேசு திட்டமிட்டிருந்தார். மானிடருக்குப் பாவத்தால் சாத்தானுக்கும் இருந்த தொடர்பை அறவே தகர்ந்தெறிந்தது கல்வாரிப் பலியே ஆகும். கல்வாரியில் தன்னை இறுதியாகத் தந்தைக்குப் பாவப்பலி செலுத்தப்போகும் இயேசு புதிய ஏற்பாட்டின் நற்கருணைப் பலி வழியாக தன்னையே உலகிற்கு கையளித்தார். இதோ நான் கதவு அருகில் நின்று தட்டிக் கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவை திறந்தால் நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன். அவர்களும் உணவு அருந்துவார்கள். நான் வெற்றி பெறும் எவருக்குமே எனது அரியணையில் என்னோடு வீற்றிருக்கும் உரிமை அளிப்பேன். கேட்கச் செவி உடையோர் திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும்" (5.661. 3:20-22).