அருளாளர் பார்த்தோலே லோங்கோ 1841-1926
பார்த்தோலே லோங்கோ ஓர் புகழ் பெற்ற வழக்கறிஞர். அவர் போம்பே அன்னைக்கு தேவாலயம் கட்டி, மக்களுக்கு வேத போதகம் செய்து வந்தார். சிறுவர்களுக்கு அனாதை மடத்தை நிறுவி, பாலர் பள்ளிகளையும், சிறைச்சாலையில் வாழ்வோரின் பிள்ளைகளுக்குக் காப்பகமும், தொழிற் பள்ளிகளையும் நிறுவி மாலை வேளையில் மறைக்கல்வியும் புகட்டி வந்தார். இவர் நற்கருணை நாதர் மேல் மிகவும் பக்திப் பற்றுதல் கொண்டிருந்தார். உங்கள் வெற்றியின் இரகசியம் என்ன? என்று அவரை கேட்ட பொழுது," இதோ அந்த நற்கருணையைப் பாருங்கள். பளிங்கு கற்களாலும், பொன்னாலும் செய்யப்பட்ட அந்த சிம்மாசனத்தில்தான் அந்த அரன்மணையில்தான் உண்மையாலும் வாழும் தெய்வமாகிய இயேசு கிறிஸ்து நற்கருணை நற்கருணை நாதர் வீற்றிருக்கின்றார். இதுவே என் வெற்றியின் இரகசியம். அந்த பரிசுத்தமான நீர் ஊற்றுதான் என் தணியாத தாகத்தைத் தீர்க்கின்றது. இதை என்னால் நிருபிக்க முடியும். மிகவும் துன்மார்க்கப் பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளைக் கூட சம்மனசுகளாய் மாற்ற நற்கருணை ஒன்றே போதும் என்று கூறுகிறார்.