காம்ப்ரே ஆயரும், இறையியல் வல்லுநருமான மேதகு தோமஸ் தெ காண்டிம்ப்ரே (Father Thomas de Cantumpre) தான் நேரில் கண்ட நற்கருணைப் புதுமையை, போனும் யுனிவர்சாலே தெ ஆபிபுஸ் (Bonum Universale de Apibuss) என்ற ஆவணத்தில் எழுதியுள்ளார்.
துவேயில் உள்ள புனித அமாத்தோ ஆலயத்தில் 1254 ஆம் ஆண்டு (ஈஸ்டர்) திருஉயிர்ப்புத் திருவிழாத் திருப்பலி நிறைவேற்றிய குருவானவர் தவறுதலாக நற்கருணையை கீழே போட்டுவிட்டார் (Dovai, France).
அவர் குனிந்து நற்கருணையை எடுத்த போது, அந்த நற்கருணையில் குழந்தை குழந்தை இயேசுவின் முகம் ஜொலித்ததைக் குருவும், விசுவாசிகளும் கண்ணால் பார்த்து ஆச்சரியமடைந்தனர்.
புதுமை பற்றியச் செய்தி காட்டுத் தீபோல் விரைவாய் பரவியது.
காம்ப்ரே ஆயர் தோமஸ் தெ கண்டிம்ப்ரே உடனே விரைந்து துவே நகரை அடைந்து, புனித அமாடோ ஆலயத்தின் முதன்மையரிடம் (Dean), புதுமையான நற்கருணையை காண்பிக்கும்படி கேட்டார்.
டீன் உடனே புதுமை நற்கருணையை ஒரு சிமிழிலே வைத்திருப்பதைத் திறந்து காட்டினார். “மக்கள் கூற்றுப்படி நான் ஒன்றும் காணவில்லை. மீண்டும் இரண்டாம் முறையாக நான் உற்று நோக்கிய பொழுது, முள்முடி தாங்கிய இயேசுவின் திருமுகத்தையும், இரண்டு சொட்டு இரத்தம் அவர் நெற்றியிலிருப்பதையும் கண்டு மண்டியிட்டு ஆராதனை செய்தேன். இறைவனுக்கு நன்றி கூறினேன்” என்று ஆயரே ஆவணத்தில் எழுதி வைத்துள்ளார்.
பிரெஞ்சுப் புரட்சியின் போது இந்தத் திருப்பண்டத்தை யாரோ எடுத்துப் பத்திரம் செய்திருந்தது தெரியவந்தது.
1854இல் அக்டோபர் மாதத்தில் புனித பேதுரு தேவாலயத்தில், மரித்த இயேசுவின் பீடத்தின் அடியில் ஒரு பெட்டியைப் பங்குக் குரு கண்டெடுத்தார்.
அதைத் திறந்து பார்த்தபோது, லத்தீன் மொழியில் நற்கருணையும். ஆவணமும் இருந்தன. "இதுவே புதுமையான நற்கருணை” என்று நான் உறுதியாக கூறுகிறேன்.
பிரெஞ்சுப் புரட்சியின்போது இதற்கு எந்த ஒரு அவசங்கையும் ஏற்படக்கூடாது என்று பத்திரப்படுத்தி, பின்னால் இதை எடுப்பவர்கள், உண்மையை அறிந்து கொள்ளும் படி என் கைப்பட இந்த ஆவணத்தை எழுதிக் கையொப்பம் செய்துள்ளேன் தேதி ஜனவரி 5, 1793.
இந்த புதுமையான நற்கருணையை 1254ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை அழியாமல் இருப்பதைப் புனித பேதுரு ஆலய குரு 1975இல் எடுத்துக் காட்டுவதைக் காணலாம்.