01 வாழ்த்துரை

Most Rev. Dr. George Antonysamy Archbishop of Madras and Mylapore

க/பேசெ/01/1228

சென்னை, 22 மார்ச், 2019.

இறையேசுவில் அன்புள்ள அருள்தந்தை ஜோனத்தன் அவர்களுக்கு,

இறை அமைதியும், ஆசீரும்!

இறைமகன் இயேசுவின் நீங்காத உயிருள்ள பிரசன்னமாகிய திவ்ய நற்கருணை நம் கத்தோலிக்க கிறிஸ்தவ வாழ்வின் அடித்தளமும் அச்சாரமுமாக அமைந்துள்ளது. இயேசுவின் பணியைத் தொடர்ந்து நிறைவேற்றும் திருத்தூதர்களாக மட்டுமல்ல, அவரது உடலை உட்கொண்டு இரத்தத்தைப் பருகுவதால், இயேசுவாகவே நாம் மாற்றம் பெறுகிறோம். மறுகிறிஸ்துவாக மாறுகிறோம். இயேசுவின் எண்ணங்களைப் போல, சிந்தனையைப் போல, அனுகுமுறையை போல, பார்வையைப் போல, விருப்பங்களைப் போல, நடத்தையைப் போல, நாம் அனைவரும் நம் உடல், பொருள், ஆவி அனைத்திலும் மாற்றம் பெறுகின்றோம். புதிய மனிதர்களாக மாறுகின்றோம்.

அத்தகைய பொருளுள்ள முழுமையான மாற்றத்தை நற்கருணை நாதர் நம் ஒவ்வொருவரிலும் ஏற்படுத்துகிறார். இயேசுவின் திருப் பிரசன்னத்தை உணரவும், அவரை ஆராதிக்கவும், அவர் தரும் புதுவாழ்வை நமதாக்கவும், 'நற்கருணை நாதர் மற்றும் நற்கருணைப் புதுமைகள்" என்னும் இத்தொகுப்பு நூல் நமக்கு மிகப் பயன் தரும் என நம்புகிறேன்.

நற்கருணை நாதரின் ஆசீரும் உடனிருப்பும் உங்கள் அனைவரோடும் என்றும் இருப்பதாக!

இயேசுவில் அன்புடன்,

+ஜார்ஜ் அந்தோணிசாமி

சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட பேராயர்

Archbishop's House, # 41, San Thome High Road, Chennai 600 004. Phone: 044-2464 1102/2464 0833 Email: abpmmsec@gmail.com