இறுதி இராவுணவு பற்றிய வெளிப்பாடு

புதிய ஏற்பாட்டில், பெந்தகோஸ்து அனுபவம் பெற்ற திருத்தூதர்கள் தூய ஆவியானவரால் வழி நடத்தப்பட்டு இயேசு தனது இறுதி இராவுணவின் போது ஏற்படுத்திய புதிய பாஸ்காவை வாய்மொழியாகவும் பின்பு எழுத்து வடிவமாகவும் நமக்கு விட்டுச்சென்றனர். முதலில் ஒத்தமை நற்செய்தி மத், மாற், லூக் வாய்பாட்டையும் பவுலடிகளார் கூற்றையும் ஆய்ந்த பிறகு யோவான் நற்செய்திக்குச் செல்வோம்.

நற்கருணைப் பற்றிய வெளிப்பாடு நமக்கு நேரடியாக இயேசுவின் மூலமே கிடைத்துள்ளது. இந்த ஒப்பற்ற சரித்திர பூர்வமான ஊற்றிலிருந்து தான் திருச்சபை நமக்கு நற்கருணையைப் பற்றிய எல்லா கோட்பாடுகளையும் தந்துள்ளது.

நற்கருணை பற்றிய வாய்பாடுகள் நான்கு உள்ளன. (மத் 26:17-30; மாற். 14:12-26; லூக் 22:14-20; 1கொரி. 11:17-30) இந்த நான்கும் இரு ஊற்றிலிருந்து அதாவது பாலஸ்தீன மரபு பேதுரு வாய்மொழியாவும், மத், மாற் மற்றது (ஹல்லனிஸ்ட் மரபு) பவுலடிகள் வாய்மொழியாகவும் (லூக், பவுல்) வந்தவையாகும் அடிப்படையிலே ஒற்றுமை இருப்பினும் சில வேற்றுமைகளும் உள்ளன.