சில்லா 1907

மார்ச் 25, 1907இல் புனித மரியா வானத்தூதர்களின் அரசி என்ற ஆலயத்தின் பங்குக் குரு ஃபெர்ணாண்டு கோமஸ் (FERNAND GOMEZ) மங்கள வார்த்தைத் திருநாள் திருப்பலியை நிறை வேற்றினார் (Silla, Spain). 

நற்கருணைப் பேழையை திறக்கப் போனபோது, அது ஏற்கனவே திறந்திருந்ததையும், பேழைக்குள் வைத்திருந்த நற்கருணைப் பாத்திரமும் அங்கிருந்து எவரோ திருடிச்சென்று விட்டதையும் அறிந்து அதிர்ச்சியடைந்தார். 

இரண்டு நாள் கழித்து நற்கருணையை அருகில் இருந்த தோட்டத்தில் ஒரு கல்லுக்கடியில் இருப்பதை அறிந்து, வெகு ஆரவாரத்துடன் பவனியாகக் கோயிலுக்கு எடுத்து வந்தனர். 

1934இல் நற்கருணை 1907இல் கொண்டுவந்தபடியே ஒரு மாற்றமுமில்லாது, கொஞ்சமும் கெடாமல் இருந்ததால் பேராயர் வலன்சியா, இந்த புதுமையான நற்கருணையைப் பற்றி ஒரு அதிகார பூர்வமானப் சுற்றறிக்கையை எழுதி, நற்கருணையைக் கதிர்பாத்திரத்தில் அனைவரும் பார்க்கும்படியாக முத்திரையிட்டு வைத்தார். 

1982இல் வலன்சியா புதிய பேராயர் மிகுவல்ரோக்கா (MIGNAEL ROCA) திருச்சட்டப்படி நற்கருணையை ஆராதிக்கலாம் என்று முறைப்படி அறிக்கை செய்தார். 

சில்லாவில் இன்றும் அழியா நற்கருணை இருப்பதை காணலாம்.