04 வாழ்த்துரை

சகோ. திவாகர் கப்புசின்

FATHIMA CHURCH
SHANTHI ASHRAM
4th Street Extension, Gandhipuram,
Coimbatore - 641 012, India.
Phone : 0422-2529159, 2525237
www.fatimachurchgandhipuramcoimbatore.com

அருள்தந்தை ஜோனத்தன், தமிழக கப்புச்சின் மாநிலத்தின் முதல் மறைமாநில அதிபராக இருந்து, பல நிர்வாகப் பணிகளையாற்றியும், தன் ஆன்மீக தேடலில் முனைந்து முன்னேற்றம் கண்டு. காலத்தின் தேவைக்கு ஏற்ற, காலத்தின் அடையாளங்களை உள்வாங்கிய ஆன்மீக தெளிவுகளைக் கொண்டு ஒருவர். அவரது ஆன்மீகத் தெளிவுகளைத் தாங்கிய புத்தகங்களும், கைபிரதிகளும், குறும்புத்தகங்களும் பல தமிழில் வெளிவந்துள்ளன அவை இன்று பல. தரமான புத்தக நிலையங்களிலும், விற்பனை கூடங்ளிலும், நூலகங்களிலும் தவறாமல் இடம் பெற்றுள்ளன. அவரது எளிய, ஆனால் அழகான ஆன்மிக கருத்து செரிவுகள் அவரது நூல்களை தேடி மீண்டும் மீண்டும் வாசிக்க பலரை தூண்டி வந்திருக்கின்றன, அவரை நேரில் கண்டு ஆன்மிக ஆற்றுப் படுத்துதல் பெற்றவர்களின் வட்டம் பெரிது என்றால் அதனினும் பெரிதாக அவரது நூல்களைப் படித்தவரின் வாசகர் வட்டம் உள்ளது. இப்போது உங்கள் கரங்களில் தவழுகின்ற நற்கருணை நாதர் என்ற நூல் மீண்டும் அவர் படைத்த ஒரு ஆன்மீக இலக்கியம். இந்நூல் அவரது ஆன்மீக அனுபவத்திலும், பிற ஆன்மீக வாதிகளோடு கொண்ட ஈடுபாடுகளிலும், மற்றும் பிறரது ஆன்மீகப் பயணங்களில் உடன் நடந்த அனுபவங்களிலி ருந்தும் எழுந்த தெளிவுகளையும் உள்ளடக்கிய மிகவும் அவசியமான ஒரு நூலாகும்.

நற்கருணையே கத்தோலிக்க விசுவாசத்தின் ஆணிவேராகும். இந்த நற்கருணைக் கொண்டாடத்தில் திளைத்தும், நற்கருணை நாதரின் நீ நாதரின் நீடித்தப் பிரசன்னத்தில் காத்துகிடந்து பெற்ற ஞானத்தை, தனது வாசிப்புகளால் மெருகூட்டி இந்தப் புத்தகத்தை வடித்தெடுத்துள்ளார். இதனை வாசிப்பவர், "உலகம் முடியும் வரை நான் உங்களோடு இருக்கிறேன்". என்ற இயேசுவின் வழுவாத வாக்குறுதியை அனுபவமாக உணர்வர் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

நற்கருணை மையமான ஆன்மீகம் மங்கிவரும் நமது காலத்தில், எவ்வாறு நற்கருணையை மையமாக கொண்டு வாழ்ந்தார்கள், தங்கள் வாழ்வில் புனித நிலை அடைந்துள்ளனர் என்று புனிதர்கள் பலரை அறிமுகம் செய்து வைக்கிறார். இதற்கு வலுசேர்க்க நற்கருணைப்பற்றிய இறையியல் சிந்தனையை எளிய நடையில் தந்துள்ளார். அத்தோடுகூட, மனுவுருவாதலை செயல்படுத்திய ஆவியானவர் எவ்வாறு நற்கருணையில் பங்கு கொள்பவரில் இன்றும் இறைவனை மனுவுருவாக்கிவருகிறார் என்று பல நடைமுறை சான்றுகள் கொண்டு விளக்குகிறார்.

இந்த நூலின் வாயிலாக இறை ஆற்றல் மக்கள் மத்தியில் பெருகவும், இறைவனின் நீங்காத பிரசன்னத்தில் நம்பிக்கை ஆழம் காணவும் வாழ்த்துகிறேன். இதுபோன்ற பல நூல்கள் தந்தையின் முயற்சியால் வெளிவரவேண்டும் என்று விரும்பி பாராட்டுகிறேன். 

நற்கருணை நாதரின் ஊழியன்

-சகோ. திவாகர் கப்புசின்