திருச்சபையின் திருத்தந்தையர்களின் படிப்பினை

திருச்சபையின் திருத்தந்தையர்கள் நற்கருணையின் இறைப் பிரசன்னத்தை இயேசுவின் வார்த்தையைக் கொண்டும் மனு உருவான மறை பொருளைக் கொண்டும் விளக்குகின்றனர். இறைவார்த்தையைக் கொண்டும் விளக்குகின்றனர். இறைவார்த்தை (Logos) மனிதரானார் நம்மிடையே குடிகொண்டார் (யோவான்.1:14)

அதேபோல் திருப்பலி நிறைவேற்றும் குரு இது என் உடல்" என்று சொல்லும் போது திராட்சை இரசம் திருஇரத்தமாகவும் பொருள் மாற்றம் அடைகின்றன (Transubstantiation). எப்படி தூய ஆவியாரால் கன்னி மரியாளிடம் இயேசு மனுவுருவானாரோ, அதேபோல் குரு அப்ப இரச பலிப் பொருளின் மீது தம் கைகளை நீட்டி, "இறைவா இந்த காணிக்கையை ஆசீர்வதித்துப் புனிதப்படுத்தி ஆவியாலும், உண்மையாலும் உமக்கு உகந்ததாகச் செய்தருளும். 

இவ்வாறு உம்முடைய அன்புத்திருமகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவின் திரு உடலாகவும், திரு இரத்தமாகவும் எங்களுக்கு இது மாறுவதாக", என்ற வார்த்தையையும் தூய ஆவியானவரின் ஆற்றலால் மனுவுருவாகும்படி செய்கிறது. ஜான் கிரிசோஸ்தெம் என்ற புனிதர் கூறுவதுபோல், "இங்கு நமக்குத் திருவுடல் திருஇரத்தமாக மாற்றுவது மனிதருடைய செயல் அல்ல. மாறாகச் சிலுவையில் மரித்த இயேசுவின் வல்லமை". 

அலைக்சாண்டிரியா சிரில் என்ற புனிதர் நமக்கு விசுவாச அடிப்படையில் கொடுக்கப்பட்ட திருச்சபையின் போதனைப்படி, "நாம் பார்ப்பது அப்பமானாலும் அப்பத்தின் ருசியை கொண்டிருந்தாலும் வசீகரம் செய்யப்பட்ட அப்பம் அப்பமல்ல அது உண்மையாலும் அது இரசம் அல்ல. இயேசுவின் திருஇரத்தம்தான். ஆகவே இந்த ஜீவிய அப்பத்தை உங்கள் ஆன்மீக உணவாக உண்டு திடம் பெற்று மகிழ்ச்சி கொள்ளுங்கள்" என்று கூறுகிறார். 

ஜான் கிரிசோஸ்தெம் தம் கூற்றுப்படி, "வசீகரம் செய்யப்பட்ட பிறகு பாத்திரத்தில் இருப்பது என்னவென்றால் இயேசுவின் விலாவிலிருந்து வழிந்தோடிய அதே இரத்தம்தான். நீ பார்ப்பது குடிலில் பிறந்த இயேசு குழந்தையே.நீ தொட்டுப் பார்க்கிறாய் உணவாக உண்கிறாய் மரியாளின் மடியில் தவழ்ந்த இயேசுதான் இப்போது நற்கருணை வடிவிலே நமக்குள் வருகிறார்" என்பது அவருடைய விசுவாச அறிக்கை. 

தண்ணீரை முதல் தரமான திராட்சை இரசமாக மாற்றிய இயேசு அப்பத்தையும் திராட்சை இரசத்தையும் தன் உடலாகவும் இரத்தமாகவும் மாற்ற வல்லவரே! எருசலேம் நகர் சிரில் நற்கருணையில் உள்ள இயேசுவின் உண்மை பிரசன்னத்தை கீழ்கண்டவாறு விளக்குகிறார். "நாம் உண்மையான விசுவாசத்தோடு அப்பத்தின் வடிவத்திலே இருக்கும் இயேசுவின் திருஇரத்தத்தையும் வாங்கும்போது அவருடைய உடலோடும் இரத்தத்தோடும் ஒன்றாக இணைகிறோம். 

ஏனெனில் அவருடைய உடலும் இரத்தமும் நம்மிலே ஒன்றாகும் போது புனித பேதுரு கூறுவது போல நாம் இயேசுவின் இறைதன்மையிலே பங்குகொள்கிறோம் (2 பேதுரு. 1:4). ஆகவே பலிப் பொருளாகிய அப்பமும், இரசமும் சாதாரண பொருள் என்று எண்ணாதீர்கள். நம் ஆண்டவரின் வார்த்தைப்படி அவை உண்மையாலும் கிறிஸ்துவின் உடலும், இரத்தமும் ஆகும். நம் கண்ணுக்கும், ருசிக்கும் அவை அப்பமாகத் தோன்றினாலும் நீங்கள் அவர் உடலையும் இரத்தத்தையும் பெறுகின்ற பெரும் பாக்கியமாகக் கருதுங்கள். 

ஆகவே நீங்கள் பார்ப்பது அப்பமானாலும் உண்மையில் அது இயேசுவின் உடலே. நீங்கள் ருசிப்பது சாதாரணமான இரசமாயிருந்தாலும் அது உண்மையாலும் இயேசுவின் இரத்தமே. அந்த அறிவிலும் விசுவாசத்திலும் நீங்கள் உங்கள் உள்ளத்தைத் தேற்றிக் கொள்ளுங்கள்." இங்கு வெளித்தோற்றத்திற்கும் உண்மையில் இயேசுவின் உடலுக்கும் இரத்தத்திற்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்துக் கூறுகிறார் எருசலேம் நகர் சிரில்.