விண்ணணக மன்னா

இஸ்ராயேல் மக்கள் எகிப்து நாட்டரசன் பாரவோனின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகி தாய் நாட்டிற்குத் திருப்பி வரும் போது யாவே அவர்களுக்கு அளித்த உணவே "விண்ணக அப்பம்" (வி.ப.16:14,31) பவுலடிகளார் விண்ணக அப்பத்தை ஆன்மீக உணவு என்று அழைக்கிறார். (1 கொரி. 10:3; திருப்பாடல் 78:24-25) மன்னாவை வானத்து உணவு என்றும், வானதூதரின் உணவால் ஊட்டி வளர்த்தீர். எல்லா இனிமையும் பல்சுவையும் கொண்ட உணவை அவர்களது உழைப்பு இல்லாம லேயே படைக்கப்பட்ட உணவை வானத்திலிருந்து அவர்களுக்கு அளித்தீர் என்று கூறுகிறது. கில்மார்டின் கூறுவது போல மன்னா நற்கருணையின் முன் அடையாளமாயுள்ளது ஏனெனில் அது மனிதரின் உடலுக்கும், ஆன்மாவிற்கும் உணவாக உள்ளது. இயேசுவும் உறுதியாக உங்களுக்கு உணவு அளிப்பவர் மோசே அல்ல வானிலிருந்து இறங்கி வந்து உங்களுக்கு வாழ்வு அளிக்கிறது என்று கூறுவதால் மன்னா நற்கருணையின் முன் அடையாளமாயுள்ளது என்பது திண்ணம். (யோவா 6:32-33) பவுலடிகளார் கொரிந்தியருக்கு எழுதும் மடலில் அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மீக உணவை உண்டனர், அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மீக பானத்தைப் பருகினர் என்று நற்கருணையின் முன் அடையாளமாக மன்னாவைப் பற்றியே பேசுகிறார்.