Rt. Rev. Dr. S. Singaroyan
Bishop of Salem Diocese
Bishop's House, Post Box. No. 703,
2, Court Road, Maravanery,
Salem -636 007. Tamilnadu, India
Te (Off) : 0427-2415641 Fax: 0427-2411517 Personal : 0427-2411517
E-mail: dioceseofsalem@gmail.com info@salemdiocese.org
Website : www.salemdiocese.org
"அனைவருக்கும் மறைக்கல்வி என்ற இலக்கோடு மறைக்கல்வி ஆண்டைச் சிறப்பிக்கும் தமிழகத் திருச்சபைக்கு நற்கருணை புதுமைகள் என்ற இந்நூல் மிகச்சிறந்த பரிசாகும். கிறிஸ்துவ நம்பிக்கையின் ஊற்றும் முழுமையும் நிறைவும் நற்கருணையே. நற்கருணையில் ஆண்டவர் இயேசு எப்போதும் உண்மையாகவே பிரசன்னமாயிருக்கிறார் என்பதே கத்தோலிக்க விசுவாசத்தின் தனிச்சிறப்பு. இந்த உண்மையை கருத்தியல் ரீதியாக விளக்கிக்கூற பலநூறு இறையியல் விளக்க நூல்கள் பல மொழிகளில் வெளிவந்துள்ளன. இதே கருத்தை வரலாற்று நிகழ்வுகள் மூலம் விளக்கிக்கூறும் நற்கருணை புதுமைகள் என்னும் இப்புதிய நூல் தமிழ்கூறும் நல்லுலகிற்கு பெரிதும் பயன்படும் என்பதில் ஐயமில்லை. நீண்டநாள் முயற்சிக்குப்பின் அருட்பணி ஜோனத்தன் க.ச. அவர்கள் ஆதாரங்கள் பலவற்றைத் திரட்டி இந்நூலை உருவாக்கி நம் கைகளில் தவழச்செய்துள்ளார். இந்த மூன்றாம் ஆயிரத்தாண்டில் நற்கருணை ஆன்மீகத்தை வளரச் செய்யவும் நற்கருணை மறைக்கல்விக்கும் இந்நூல் இந்நூல் துணைபுரியும் என்ற நம்பிக்கையோடு நூலாசிரியரை ஆசீருடன் வாழ்த்துகிறேன். அவரது முயற்சி நிறை பலன் தருக!
மேதகு செ. சிங்கராயன்
சேலம் ஆயர்