ஆஸ்திரியா, இன்வாலி (Inn Valley) யில் உள்ள ஃபியக்ட் என்ற ஆலயத்தில் 1310 ஆம் ஆண்டு ஒரு புதுமை நடந்தது (Fiecht, Austria). திருப்பலி நிறைவேற்றிய குரு இயேசுவின் திருவுடல். திருஇரத்தம் என்ற உண்மையைப் பற்றி குழப்பமுற்றார்.
“இது என் இரத்தம்” என்ற வசீகர வார்த்தையை உச்சரித்தபோது, திருப்பலிப் பாத்திரத்திலிருந்த இரசம் இயேசுவின் திருஇரத்தமாக மாறி, பாத்திரத்திலிருந்து வழிந்தது. 170 ஆண்டுகள் கழிந்தும் 1480இல் எழுதப்பட்ட ஆவணத்தில், "இந்த திருஇரத்தம் புதிய காயத்திலிருந்து வழியும் இரத்தம் போல் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
புனித ஜான்ஜன் பெர்க் என்ற மடத்தில் புதைந்துள்ள கல்லிலே பொறிக்கப் பட்டிருப்பதாவது, "புனித ஜார்ஜ், புனித அப்போஸ்தலர் யாகப்பருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட கோயிலில், மடாதிபதி ரூபர்ட் காலத்தில் 1310இல் பூசை ஒப்புக் கொடுத்த குரு, வசீகர வார்த்தையைச் சொன்ன பிறகு, இரசம் இயேசுவின் திருஇரத்தமாக மாறிவிட்டதா என்று குழம்பினார்.
உடனே பாத்திரத்திலிருந்து திருஇரத்தம் ததும்பி வெளியே சிந்தியது. மடாதிபதி ரூபர்ட்டும் மற்ற துறவிகளும், திருப்பலியில் பங்கு கொண்ட விசுவாசிகளும் இதைக் கண்டு வியந்தனர். குருவானவர் திருஇரத்தமாக மாறியதை முழுவதும் குடிக்க முடியாததால் மடாதிபதி ரூபர்ட் திருஇரத்தத்தை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நற்கருணைப் பேழையில் வைத்துவிட்டார்.
இந்த அற்புதம் பற்றியச் செய்தி எங்கும் பரவியது. மக்கள் பெரும்திரளாக வந்து ஆராதனை செய்தனர். ஆகவே 1472 இல் ஜார்ஜ்வான் பிரிக்ளசன் என்ற ஆயர், அருட்திரு வில்டன் ஜோனஸ், சிக்மண்டு (தாவுர்).
காஸ்பார் (WILTEN JOAHANNES, SIGMUND, KASPAR) அடங்கிய குழுவை அமைத்து, ஆராய்ச்சி செய்து. அறிக்கை சமர்ப்பிக்கக் கட்டளை இட்டார். அதன்படி இந்தத் திருஇரத்தம் உண்மையாலும் இயேசுவின் இரத்தம் என்றும், ஆராதனை செய்யலாம் என்று அத்தாட்சிப் பத்திரம் கொடுத்தார்.