எத்திஸ்வில் 1447

ஜூலை 16, 1447இல் எர்மான் வான் ரசக், என்ற புரோன் பிரபு, Protocol of Justice என்ற ஆவணத்தில் கூறியிருப்பதாவது: மே 23, புதன்கிழமை 1447இல் எத்திஸ்வில் என்ற பங்குக் கோயிலிருந்து, நற்கருணை திருடப்பட்டு விட்டது (Ettiswil, Switzerland). 

பங்குக்கோயிலோடு இணைந்தவாருள்ள ஒரு வேலியில் தரையில் கிடப்பதை மார்கரட் சுல்மிஸ்டர் (Margaret Schulmeister) என்ற பெண் கண்டாள். 

போலிஸ் விசாரணையில் அன்னாவோத்தி (Anna Vogtti) என்பவள் தான் திருடியதை ஒப்புக்கொண்டாள். 

"நான் பெரிய ஓஸ்தியைத் திருடினேன். ஆனால் அது எவ்வளவு பாரமாய் இருந்தது என்றால், என்னால் முன்னும் போக முடியவில்லை, பின்னும் போக முடியவில்லை. எனவே பெரிய ஓஸ்தியை வேலிக்கருகில் போட்டுவிட்டேன். 

பன்றிப் பண்ணை வைத்திருக்கும் மார்கிரட் சுல்மிஸ்டர் தன் பன்றிகளை மேய்த்துச் செல்லும் போது, நற்கருணைக்கு அருகில் வந்ததும், நகர மறுத்துவிட்டன. 

ஆகவே, நான் இரண்டு ஆட்களை உதவிக்கு அழைத்தேன். அவர்கள் நற்கருணை ஏழு துண்டுகளாக பூ போலவும் காட்சி அளித்ததைக் கண்டார்கள். அதைச் சுற்றிப் பேரொளி வீசுவதையும் பார்த்தார்கள். 

உடனே பங்குக் குருவுக்கு அறிவித்தனர். அவரும் பங்கு மக்களுடன் அங்கு வந்து அதை எடுக்க முயன்றபோது, ஆறு துண்டுகளை மட்டும் எடுக்க முடிந்தது. ஏழாவது துண்டை எடுக்க முடியவில்லை. ஆகவே, அங்கேயே ஒரு கோயிலை கட்டத் தீர்மானித்தனர். 

ஆறு துண்டுகளை மட்டும் எத்தஸ்வில் பங்கு கோயிலுக்குக் கொண்டு வந்து கதிர்பாத்திரத்தில் வைத்தனர். 

அவை இன்றும் அழியாமல் இருப்பதை காணலாம். 

புதிய ஆலயம் டிசம்பர் 28, 1448இல் அர்ச்சிக்கப்பட்டது.