மெல்கிசெதேக்கின் பலி (தொ.நூ. 14:18-20)

"சாலேம் அரசர் மெல்கிசெதேக் அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார். அவர் உன்னத கடவுளின் அர்ச்சகராக இருந்தார். அவர் ஆபிரகாமை வாழ்த்தி, 'விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுள், ஆபிரகாமிற்கு ஆசி வழங்குவாராக! உன் எதிரிகளை உன்னிடம் ஒப்புவித்த உன்னத கடவுள் போற்றி போற்றி' என்றார்" (தொ. நூ. 14:18-20). மெல்கிசெதேக் அரசரும், அர்ச்சகரும், நீதியின் சமாதானத்தின் அரசரும், தொடக்கமும் முடிவில்லாதவரும். இவருக்குத் தந்தை இல்லை, தாய் இல்லை என்பதால், இவர் கடவுளின் மகன், குருவாக என்றும் நிலைத்திருப்பவர் என்று எபிரேயர் திருமுகம் கூறுகிறது (எபி 7:13).

திருச்சபையின் திருத்தந்தையரும் குறிப்பாக கார்தேஜ் சிபிரியனும், அலெக்சாண்டிரியா கிளமெண்டும், தொ.நூ 14:18 வாக்கின்படி இறைஏவுதலின்படி மெல்கிசெதேக் அப்ப இரசப் பலியை ஒப்புக்கொடுத்தது, நற்கருணைப் பலியின் முன் அடையாளம் என்றே கூறுகின்றனர்.